பக்கம்:நான்மணிகள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நான்மணிக்கடிகை 17

அலைப்பான் பிறவுயிரை யாக்கலுங் குற்றம் விலைப்பாலிற் கொண்டூன் மிசைதலுங் குற்றம் சொலற்பால வல்லாத சொல்லலுங் குற்றம் கொலைப்பாலுங் குற்றமே யாம். - (26)

கோனோக்கி வாழுங் குடியெல்லாந் தாய்முலைப் பானோக்கி வாழுங் குழவிகள் - வானத் துளிநோக்கி வாழும் உலகம், உலகின் விளிநோக்கி யின்புறூ உங் கூற்று. (27)

கற்பக் கழிமட மஃகு மடமஃகப் புற்கந்தீர்ந் திவ்வுலகின் கோளுணருங் - கோளுணர்ந்

தத்துவ மான நெறிபடரும் அந்நெறி Iதால் இப்பா லுலகின் இசைநிறீஇ - யுப்பால் உயர்ந்த வுலகம் புகும். (28)

குழித்துழி நிற்பது நீர்தன்னைப் பல்லோர் பழித்துழி நிற்பது பாவம் - அழித்துச் செறுவழி நிற்பது காமந் தனக்கொன் ஹம் றுறுவழி நிற்ப தறிவு. - (29)

திருவிற் திறலுடைய தில்லை ஒருவற்குக் கற்றலின் வாய்த்த பிறவில்லை - எற்றுள்ளும் இன்மையின் இன்னாத தில்லை யில்என்னாது, வன்மையின் வன்பாடதில்,(35)

நா.-2
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்மணிகள்.pdf/19&oldid=1355128" இலிருந்து மீள்விக்கப்பட்டது