பக்கம்:நான்மணிகள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18 நான்மணிகள்

புகையைக் கண்டால் நெருப்பு இருப்பது தோன்றும்; முகமலர்ச்சியைக் கண்டால் மன மகிழ்ச்சி தோன்றும்; வஞ்சகச் செயல்களால் உளப் பகைமை தோன்றும்; பகைமை முற்றினால் துன்பங்கள் தோன்றும். (31)

வருவது அறியாப் பெண்கள் நோய்க்கு ஒப்பாவர்; அன்பு நிறைந்த மக்கள் அணிகலனுக்கு ஒப்பாவர்; அறிவு இல்லாத ஆண்கள் புல்லுக்கு ஒப்பாவர்; வலிமையுடைய நெஞ்சினர் கல்லுக்கு ஒப்பாவர். (32)

அருளுள்ளம் கொள்வதைவிட நற்பிறப்பு வேறில்லை. பெற்று வளர்த்த தாயைவிட உறவினர் வேறில்லை; தவம் நிறைந்த வாழ்வைவிடச் சிறந்த அழகு வேறில்லை;இளமை நிறைந்த வாழ்வைவிட இன்பமானது வேறில்லை. (33)

இரும்புக் கம்பிகளை இரும்பினாலேயே வெட்டுவர்; நீர் குடிப்பவர் நீரினாலேயே வாய் கழுவுவர்; அருஞ் செயல்களை அரியவர்களைக் கொண்டே செய்வர்; பெருஞ் செயல்களைப் பெரியவர்களைக்கொண்டே முடிப்பர். (34)

வீரக் களிப்பு மறவர்க்குப் போர்க்களத்தில் தோன்றும்; ஈகைக் களிப்பு புரவலர்க்கு ஈயும்பொழுது தோன்றும்; களிப்பு ஒன்றை உணரும்பொழுது தோன்றும்? பிறரிடம் பிதற்றும்பொழுது தோன்றும். (35)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்மணிகள்.pdf/20&oldid=1355058" இலிருந்து மீள்விக்கப்பட்டது