பக்கம்:நான்மணிகள்.pdf/23

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நான்மணிக்கடிகை 21

மையாற் றளிர்க்கும் மலர்க்கண் - மா விருள் நெய்யாற் றளிர்க்கும் நிமிர்சுடர் - பெய்யல் முழங்கத் தளிர்க்குங் குருகிலை நட்டார் வழங்கத் தளிர்க்குமாம் மேல். - (36)

நகையினிது நட்டார் நடுவட் பொருளின் தொகையினிது தொட்டு வழங்கின்-வகையுடைப் பெண்ணினிது பேணி வழிபடிற் பண்ணினிது பாடல் உணர்வா ரகத்து. (37)

கரப்பவர்க்குச் செல்சார் கவிழ்தலெஞ் ஞான்றும் இரப்பவர்க்குச் செல்சார் ஒன்றிவார் - பரப்பமைந்த தானைக்குச் செல்சார் தறுகண்மை ஊனுண்டல் செய்யாமை செல்சார் உயிர்க்கு. (38)

கண்டதே செய்பவாங் கம்மியர் உண்டெனக் கேட்டதே செய்ப புலனாள்வார் - வேட்ட இனியவே செய்ப வமைந்தார் முனியாதார் - முன்னிய செய்யுந் திரு. (39)

திருவுந் திணைவகையால் நில்லா பெருவலிக் கூற்றமுங் கூறுவ செய்துண்ணா தாற்ற மறைக்க மறையாதாங் காம முறையும் இறைவகையால் நின்று விடும். (40)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்மணிகள்.pdf/23&oldid=587237" இருந்து மீள்விக்கப்பட்டது