பக்கம்:நான்மணிகள்.pdf/24

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


22 நான்மணிகள்

உயிர்கள் பிறக்கும்பொழுது ஒழியென்றால் ஒழியா: அவை இறக்கும் பொழுது இரு என்றால் இரா; செல்வம் சேரும் பொழுது யாவும் பெருகும்; அது பிரியும்பொழுது உள்ளதும் அழியும். (41)

வீரர்களின் சிறப்பு போர் ஆற்றால் கெடும்: மரங்களின் சிறப்பு வேர் அற்றால் கெடும்; மலரின் சிறப்பு நீர் அற்றால் கெடும்; மன்னரின் சிறப்பு படை அற்றால் கெடும். (42)

அயலார் எனப்படுபவர் நல்லியல்பு அற்றவர்; நண்பர் எனப்படுபவர் நல்லியல்பு உள்ளவர்; தந்தை எனப்படுபவர் தன்னுடைய ஆசிரியர்; தாய் எனப்படுபவர் தான் பெற்ற பெரும்பேறு. X- (43)

நாணமற்றபோது அறிவு அற்றுப் போகும்; புலன் அடங்கியபோது தீமை அற்றுப் போகும்; நீரற்ற போது பயிர் அற்றுப் போகும்; நல்மற்றபோது நட்பு அற்றுப்

ப்ோகும். - (44)

செய்ந்நன்றி சாவது நன்றியறியார் இடத்தில் விருந்து வருந்திச் சாவது அன்பில்லார் இடத்தில்; இசை அழிந்து :ாவது அறிவில்லார் இடத்தில்: ஊடல் அழிந்து சாவது புல்வியறியார் இடத்தில். * .. (45)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்மணிகள்.pdf/24&oldid=587240" இருந்து மீள்விக்கப்பட்டது