பக்கம்:நான்மணிகள்.pdf/25

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நான்மணிக்கடிகை 23

பிறக்குங்காற் பேரெனவும் பேரா இறக்குங்கால் நில்லெனவும் நில்லா உயிரெனைத்தும் - நல்லாள் உடம்படிற் றானே பெருகுங் கெடும்பொழுதில் கண்டனவுங் காணா கெடும். (41)

போரின்றி வாடும் பொருநர்சீர் கீழ்வீழ்ந்த வேரின்றி வாடும் மரமெல்லாம்-நீர்பாய் மடையின்றி நீணெய்தல் வாடும் படையின்றி மன்னர்சீர் வாடி விடும். (42)

ஏதிலா ரென்பார் இயல்பில்லார் யார்யார்க்கும் காதலா ரென்பார் தகையுடையார் - மேதக்க தந்தை யெனப்படுவான் தன்னுவாத்தி தாயென்பாள் முந்துதான் செய்த வினை. (43)

பொறிகெடும் நாணற்ற போழ்தே நெறிபட்ட ஐவராற் றானே வினைகெடும் ப்ொய்யா நலங்கெடும் நீரற்ற பைங்கூழ் நலமாறின் நண்பினார் நண்பு கெடும். . . . . * * (44)

நன்றிசாம் நன்றறியா தார்முன்னர்ச் சென்ற விருந்தும் விருப்பிலார் முற்சாம் - அரும்புணர்ப்பிற் பாடல்சாம் பண்ணறியா தார்முன்னர் ஊடல்சாம் ஊட லுணரா ரகத்து. - (45)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்மணிகள்.pdf/25&oldid=587245" இருந்து மீள்விக்கப்பட்டது