பக்கம்:நான்மணிகள்.pdf/28

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


26 நான்மணிகள்

வெறுப்பதற்கு உரியது பிறரை இகழும் செயல்: விரும்புதற்கு உரியது நண்பரின் உறுதிச் சொல்; சேர்வ தற்கு உரியது நல்லோரின் அறநெறி; தேர்வதற்கு உரியது நூல்களில் மெய்ப்பொருள். (51)

ஆற்று வெள்ளத்தை உள் அடக்கும் குளங்களும் உள்ளன; அரசர் விரும்பி ஏற்கும் குடிமக்களும் உள்ளனர்; வேதத்தினுஞ் சிறந்த பாடல்களும் உள்ளன; வேள்வியிலும் உயர்ந்த வேளாண்மையும் உள்ளன. (52)

வேளாளன் என்பவன் வித்தும் ஏரும் உடையவன்; பார்ப்பனன் என்பவன் ஏலாதான் எனினும் சாதிப்பவன்; துணைவி என்பவள் அறிவும் அழகும் உடையவள்: தலைவன் என்பவன் தன் சேனையுடன் வாழ்வன். (53)

யானையை உடையவர் அதன் சினங்கண்டு மகிழ்வர்; குதிரையின் விரைந்த ஒட்டத்தைக் கண்டு மன்னர்கள் மகிழ்வர்; மங்கையரின் நாணத்தைக் கண்டு நன்மக்கள் மகிழ்வர்; தீயதையும் தீமையையும் கண்டு தீயோர் மகிழ்வர். - - (54)

கண்களைவிடச் சிறந்த உறுப்புக்கள் வேறு எதுவு மில்லை; கணவனைவிட உறவினர்கள் மகளிர்க்கு வேறு எவருமில்லை; மக்களைவிட உயர்ந்த பொருள் பெற்றோர்க்கு வேறு எதுவுமில்லை; ஈன்ற தாய்க்கு ஒப்பாக இவ்வுலகில் எதுவுமேயில்லை. (55)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்மணிகள்.pdf/28&oldid=587254" இருந்து மீள்விக்கப்பட்டது