பக்கம்:நான்மணிகள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

நான்மணிகள்

 கற்றவரோடு விரும்பி வாழ்பவர் கற்றவரேயாவர்: இரக்கமற்ற மனத்தினர் இடர் செ ய் பவ ரே யாவர்; உண்மையை மறைத்துக் கூறுபவர் பகைவரேயாவர்; கீழ் மக்கள் பாம்பு வாழ்கின்ற புற்றேயாவர். (56)

சிறந்த செயல்களைச் செய்பவர் உயர்ந்த அறிஞர்கள்; தீய செயல்களைச் செய்பவர் தாழ்ந்த அறிவினர்; அறச்செயல்களைச் செய்பவர் நற்குடிப் பிறந்தோர்; பேராசையைத் துறந்தோர் பெருநலம் பெறுவோர். (57)

ஞாயிறும் விண்மீனும் என்றென்றும் உள்ளன: நலமும் பிணியும் என்றென்றும் உள்ளன; ஈவாரும் ஏற்ரபாரும் என்றென்றும் உள்ளனர்; இறப்பாரும் பிறப்பாரும் என்றென்றும் உள்ளனர். (58)

உயிர் கொல்லாது உண்பவன் நல்லுணவு உண்பவன்; முகம் கோணி வாழ்பவன் வெறுக்கப்படுபவன்; நன்மை செய்யாது வாழ்பவன் நண்பர்களை இழந்தவன்; ஒழுக்கம் தவறாது வாழ்பவன் உலகோர்க்கு இனியவன். (59)

பிறருக்குக் கொடுத்து உண்பது புகழுக்கு இடம் தரும்; பொருளைப் பறித்து உண்பது பழிக்கு இடம் தரும்: விரும்பாதார் முன் செல்வது இகழ்ச்சிக்கு இடம் தரும்: தகுதி அறியாரிடம் இரப்பது அழிவுக்கு இடம் தரும். (60)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்மணிகள்.pdf/30&oldid=1379979" இலிருந்து மீள்விக்கப்பட்டது