பக்கம்:நான்மணிகள்.pdf/32

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


.30 நான்மணிகள்

நெய்யைச் சொரியச்சொரிய நெருப்பு வளரும்; வாழ்த்தி வணங்க வணங்கப் பெரியோர் மகிழ்வர்; கன்று ஊட்ட ஊட்டப் பால் சுரக்கும்; விரும்பிப் போற்றப் போற்ற விருந்தினர் பெருகுவர். (61).

நல்ல குடிப்பெருமையை நன்மக்களாற் காணலாம்; நண்பனது உள்ளத்தைக் கெட்டபோது அறியலாம்; சிறப் புடைய வாழ்வைச் செல்வப் பெருக்கால் அறியலாம்; பண் புடைய அறிஞரைப் பகைவன் போற்றக் காணலாம். (62)

அழகற்ற கண்களிலும் விரும்பும் கண்கள் உள்ளன; அழகற்ற பெண்களிலும் போற்றும் பெண்கள் உள்ளனர்; அடிமைப்பட்ட நாட்டினும் சிறந்த ஊர்கள் உள்ளன. சிறப்பற்ற பாட்டிலும் சில கருத்துகள் உள்ளன. (63)

திரியில் உள்ள நெருப்பைக் கண்டு தொழுது எழுவர்; விறகில் உள்ள நெருப்பைக் கண்டு வெறுத்து ஒதுக்குவர்; படிக்காத மூத்தவனை மதியாது விடுவார்கள்; படித்துள்ள இளையவனைப் பாராட்டி மகிழ்வார்கள். (64).

பொருள் இருந்தால்தான் விரும்பியது கிடைக்கும்; நீர் இருந்தால்தான் விதைகள் முளைக்கும்; முயற்சி இருந்தால் தான் செல்வம் பெருகும்; சோம்பல் இருந்தால்தான் அழிவு நெருங்கும். - - - - (65).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்மணிகள்.pdf/32&oldid=587259" இருந்து மீள்விக்கப்பட்டது