பக்கம்:நான்மணிகள்.pdf/33

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நான்மணிக்கடிகை 31

நெய்விதிர்ப்ப நந்தும் நெருப்பழல், சேர்ந்து வழுத்தவரங் கொடுப்பர் நாகர் - தொழுத்திறந்து கன்றுாட்ட நந்துங் கறவை கலம்பரப்பி நன்றுாட்ட நந்தும் விருந்து. (61).

பழியின்மை மக்களாற் காண்க வொருவன் கெழியின்மை கேட்டா லறிக - பொருளின் நிகழ்ச்சியா னாக்க மறிக புகழ்ச்சியாற் போற்றாதார் போற்றப்படும். (62)

கண்ணுள்ளும் காண்புழிக் காதற்றாம் பெண்ணின் உருவின்றி மாண்ட வுளவாம் - ஒருவழி நாட்டுள்ளுங் நல்ல பதியுள பாட்டுள்ளும் பாடெய்தும் பாடலுள. (63)

திரியழற் காணிற் றொழுப விறகின் எறியழற் காணின் இகழ்ப - ஒரு குடியின் கல்லாது மூத்தானைக் கைவிட்டுக் கற்றான் இளமைபர் ராட்டு முலகு. (64).

கைத்துடையான் காமுற்ற துண்டாகும் வித்தின்

முளைக்குழா நீருண்டேல் உண்டாம் - திருக்குழாம் ஒண்செய்யாள் பார்த்துறின் உண்டாகும் மற்றவள் துன்புறுவா ளாகிற் கெடும். (65).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்மணிகள்.pdf/33&oldid=587260" இருந்து மீள்விக்கப்பட்டது