பக்கம்:நான்மணிகள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

நான்மணிகள்

 குதிரையின் சிறப்பு கொண்டவனைப் பொறுத்தது; அறத்தின் சிறப்பு ஆற்றலைப் பொறுத்தது; குளத்தின் சிறப்பு வாய்க்காலைப் பொறுத்தது; வாழ்க்கையின் சிறப்பு வருவாயைப் பொறுத்தது. (71).

ஊழிகள் ஆண்டு ஆண்டாய்க் கழிந்தன; நாட்கள் நாழிகை நாழிகையாய்க் கழிந்தன; நல்லோர் தொண்டு செய்தே மறைந்தனர்; அறிவிலார் வைது வைதே அழிந்தனர். . - (72).

கற்றறிந்தோர் தளர்ந்தால் எப்படியும் நிமிர்வர் கல்லாதவர் தளர்ந்தால் கெட்டே அழிவர்; நல்ல செயல்களே வாழ்வுக்கு ஏற்றது; நல்லறிவு ஒன்றே வாழ்க்கைக்கு வித்து. (73)

புலவர் பெருமக்களே மக்களில் உயர்ந்தவர்; புலவரோடு வாழ்பவர் அவரது உறவினர்; புலவரைப் போற்றுபவர் அவர் அருள் பெற்றவர்; அவரிடம் அன்பு கொண்டோர் அவரையே ஒத்தவர். (74)

பொய் சொல்லும்பொழுதே நட்பை விட்டுவிடு; மருத்துவன் கேட்கும்பொழுதே பிணியைச் சொல்லிவிடு, பெரியோர் கூறும்பொழுதே தவறை விட்டுவிடு; உரியவன் கேட்கும் பொழுதே பொருளைக் கொடுத்துவிடு. (75)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்மணிகள்.pdf/36&oldid=1379916" இலிருந்து மீள்விக்கப்பட்டது