பக்கம்:நான்மணிகள்.pdf/39

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நான்மணிக்கடிகை 37 -

நாக்கின் அறிப இனியதை மூக்கினான் மோந்தறிப எல்லா மலர்களும் - நோக்குள்ளுங் கண்ணினாற் காண்ப அணியவற்றைத் தொக்கிருந் தெண்ணினால் எண்ணப் படும். (76)

சாவாத வில்லை பிறந்த உயிரெல்லாந் தாவாத வில்லை வலிகளும் - மூவா திளமை யிசைத்தாரு மில்லை வளமையிற் கேடின்றிச் சென்றாரு மில், (77)

சொல்லா னறிப ஒருவனை மெல்லென்ற நீரா னறிப மடுவினை-யார்கண்ணும் ஒப்புரவி னானறிய சான்றாண்மை மெய்க்கண் மகிழானறிய நறா. - (78).

நாவன்றோ நட்பறுக்குந் தேற்றமில் பேதை விடுமன்றோ வீங்கப் பிணிப்பின் அவா.அப் படுமன்றோ பன்னூல் வலையிற் கெடுமன்றோ மாறு னிறுக்குந் துணிபு. (79)

கொடுப்பின் அசனம் கொடுக்க விடுப்பின் உயிரிடை யீட்டை விடுக்க - வெடுப்பிற் கிளையுட் கழிந்தா ரெடுக்க கெடுப்பின் - வெகுளி கெடுத்து விடல். (80ys,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்மணிகள்.pdf/39&oldid=587266" இருந்து மீள்விக்கப்பட்டது