பக்கம்:நான்மணிகள்.pdf/40

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நான்மணிகள்

வறுமையினால் அழகும் இளமையும் குன்றும்; கல்லா மையால் குடியும் பெருமையும் குன்றும்; நீர் இல்லாமை யால் பயிரும் பலனும் குன்றும்; அதிகச் சுமையினால் ஆளும் எருதும் குன்றும். (81)

கற்ற அறிஞர்க்கும் தம் ஊர் என்று ஒர் ஊர் இல்லை; கைப்பொருள் உள்ளவர்க்கும் தம் ஊர் என்று ஒர் ஊர் இல்லை; ஒழுக்கம் உள்ளவர்க்கும் தம் ஊர் என்று ஒர் ஊர் இல்லை; ஒழுக்கம் கெட்டவர்க்கும் தம் ஊர் என்று ஒர் ஊர் இல்லை. - (82)

கல்வி இல்லாதவர்க்கு அவர்களின் வாய்ச் சொல்லே எமன்; செழித்த வாழைக்கு அது ஈன்ற காய்களே எமன்; தீமை செய்பவர்க்கு அவர்தம் செய்கையே எமன்; உயர்ந்த வாழ்வுக்கும் ஒழுக்கம் தவறுபவரே எமன். (83)

நீர் வளத்தால் சிறப்படையும் விளைநிலம்: கடல் வளத்தால் சிறப்படையும் பட்டினம்; நாட்டு வளத்தால் சிறப்படைவர் மன்னர்; கலை வளத்தால் சிறப்படையும் கூத்து. (84)

கணவனோடு ஒற்றுமைப்பட்டு வாழ்தல் பெண்களுக்கு நல்லது: அறத்தோடு ஒன்றுபட்டு வாழ்தல் அறிஞர்க்கு நல்லது தீய ஆட்சியை மாற்றி ஆளுதல் மன்னர்க்கு நல்லது; சுற்றத்தாரைக் கைவிடாது இருப்பது வாழ்வுக்கு நல்லது. - (85

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்மணிகள்.pdf/40&oldid=587267" இருந்து மீள்விக்கப்பட்டது