பக்கம்:நான்மணிகள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

நான்மணிகள்

 திருடாமை வேண்டும் பிறர்க்குரிய பொருள்களை; தள்ளாமை வேண்டும் தகுதியுடைய செயல்களை;சேராமை வேண்டும் சிற்றின மக்களை; பகையாமை வேண்டும் எப்போது எவரையும். - (86)

நெருங்கி வாழும் மக்களை நன்மை செய்து உயர்த்து ; ஒட்டாத மக்களைக் காலமறிந்து விலக்கு; எவரிடமும் சென்று உண்பதைக் குறை; ஏழைகளிடத்துக் காட்டும் கோபத்தை விடு. (873

கெட்டுப்போகிற மக்கள் சோம்பலில் இருப்பர்; விரும்பாததைச் செய்பவர் கொடுமையில் இருப்பர்; நாணமுள்ள பெண்கள் நல்லியல்பில் இருப்பர்; வலிமையுள்ள யானை கட்டுமிடத்தில் இருக்கும். - (88)

அருளுடைய பெரியோர் நல்நெறியை அறிவர்; அறிவுடைய மன்னர் ஆட்சி முறையை அறிவர்; பெருந்தன்மை யுடையோர் வணங்கும் முறை அறிவர்; பண்புடைய பெண்கள் வாழ்க்கை முறை அறிவர். (89)

காவல் இல்லாமல் நல்லவள் கற்பைக் காப்பாற்றி நிற்பாள்; காவல் இருப்பினும் அல்லவள் நெறி தவறி விடுவாள்; இடையூறு சேரினும் காதல் தன் வழியே செல்லும்; முயன்று மறைத்தாலும் கொலை செய்தவனைக் காட்டி விடும். (90)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்மணிகள்.pdf/42&oldid=1379928" இலிருந்து மீள்விக்கப்பட்டது