பக்கம்:நான்மணிகள்.pdf/43

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நான்மணிக்கடிகை 41

கள்ளாமை வேண்டுங் கடிய வருதலால் தள்ளாமை வேண்டுந் தகுதி யுடையன நள்ளாமை வேண்டுஞ் சிறியாரோ டியார் மாட்டும் கொள்ளாமை வேண்டும் பகை, (86).

பெருக்குக நட்டாரை நன்றின்பா லுய்த்துத் தருக்குக வொட்டாரைக் கால மறிந்தாங்கு கருக்குக யார்மாட்டு முண்டி சுருக்குக செல்லா விடத்துச் சினம். (87)

மடிமை கெடுவார்கள் நிற்கும் கொடுமைதான் பேணாமை செய்வார்கண் நிற்குமாம் - பேணிய நாணின் வரைநிற்பர் நற்பெண்டிர் நட்டமைந்த தூணின்கண் நிற்குங் களிறு. (88)

மறையறிய அந்தண் புலவர் முறையொடு வென்றி யறிய அரசர்கள் - என்றும் வணங்கல் அணிகலஞ் சான்றோர்க் கஃதன்றி அணங்கல் வணங்கின்று பெண். (89)

பட்டாங்கே பட்டொழுகும் பண்புடையாள்

(காப்பினும் பெட்டாங் கொழுகும் பிணையிலி - முட்டினுஞ் சென்றாங்கே சென்றொழுகுங் காமம் கரப்பினும் கொன்றான்மேல் நிற்குங் கொலை, (90).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்மணிகள்.pdf/43&oldid=587273" இருந்து மீள்விக்கப்பட்டது