பக்கம்:நான்மணிகள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

நான்மணிகள்


அஞ்சாமை பெருகினால் வலிமை பெருகும்; அன்பு பெருகினால் சுற்றத்தார் பெருகுவார்; அருட்குணம் பெருகினால் அறச்செயல் பெருகும்; கொடுமைக்குணம் பெருகினால் தீச்செயல் பெருகும். (91)

இளமையிற் கல்லாத செயல் எப்போதும் தீமை தரும். வருவாய் இல்லாதபோது ஈகைச் செயல் தீமை தரும்; சுற்றத்தார் இல்லாதபோது சினமடைதல் தீமை தரும்; அன்பில்லார் இல்லத்தில் உண்ணுதல் தீமை தரும். (92)

கொலையைச் செய்ய எண்ணுவது கொடியவருக்கும் தீது; பிள்ளைகளைப் படிப்பியாமல் வளர்ப்பது பெற்றோர்க்கும் தீது; நாணமின்றி முன்வந்து நிற்பது நல்ல பெண்ணுக்கும் தீது, கொள்கையின்றி நடப்பது குடிப்பெருமைக்கும் தீது, (93)

நல்லொழுக்கம் என்பது கல்வியறிவால் உண்டாவது; அறமும் இன்பமும் பொருட்செல்வத்தால் உண்டாவது: நேர்மை என்பது நடுநிலைமையால் உண்டாவது: நல்ல முடிவு என்பது தானும் ஆராய்வதால் உண்டாவது. (94)

கள் இல்லாமையால் வருந் துன்பத்தைக் குடியர் அறிவர்; நீர் இல்லாமையால் வருந்துன்பத்தைப் பறவைகள் அறியும்; வறுமைத் துன்பத்தை இருமனைவியரைப் பெற்றவர் அறிவர்; மறைப்பதனால் வருந்துன்பத்தைத் திருடர் அறிவர். - * (95)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்மணிகள்.pdf/44&oldid=1379934" இலிருந்து மீள்விக்கப்பட்டது