பக்கம்:நான்மணிகள்.pdf/48

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


46 நான்மணிகள்

வைது வருவதால் இழிவு பெருகும்; வணங்கி வாழ்வ தால் நல்லறிஞர் பெருகுவர்; பொருளைப் போற்றுவதால் இன்பம் பெருகும்; இரக்கம் காட்டுவதால் அறச் செயல் பெருகும். - (101).

எல்லாம் அறிந்தவன் என்று இவ்வுலகில் எவனு மில்லை; ஏதும் அறியாதவன் என்று இவ்வுலகில் எவனு மில்லை; குற்றமே செய்பவன் என்று இவ்வுலகில் எவனு மில்லை; குறையே இல்லாதவன் என்று இவ்வுலகில் எவனு மில்லை. (102)

மனைக்கு ஒளிவீசும் விளக்கு மனைவி; பெற்றோர்க்கு ஒளி வீசும் விளக்கு மக்கள்: மக்களுக்கு ஒளிவிசும் விளக்கு கல்வி; கல்விக்கு ஒளிவிசும் விளக்கு ஒழுக்கம். (103)

இன்சொல் வழங்குவதால் நட்புறவு உண்டாகும்; வன்சொல் வழங்குவதால் வசை பகை உண்டாக்கும்; மென் சொல் வழங்குவதால் அருள்மனம் உண்டாகும்: அருள் மனம் பெறுவதால் அழியாவாழ்வு உண்டாகும். (104)

நான்மணிகள் முற்றிற்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்மணிகள்.pdf/48&oldid=587283" இருந்து மீள்விக்கப்பட்டது