பக்கம்:நான்மணிகள்.pdf/6

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நான்மணிக்கடிகை!

தமிழ் வளர்ந்து மறைந்த தமிழ்ச் சங்கங்கள் மூன்று. அவை முறையே முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச் சங்கம் எனப்பெறும். இவற்றுள் முதற்சங்க இடைச்சங்க காலத்தைத் திட்டவட்டமாக அறிய முடியவில்லை. கடைச் சங்ககாலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு எனலாம்.

கடைச்சங்க காலத்தில் இருந்த தமிழ் நூல்கள் 36. இவை பத்துப் பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க் கணக்கு என்ற முப்பிரிவை உடையன. 10 - ம், 8 - ம் மேல் கணக்கு நூல்கள். அவைபெரும்பாலும் காதவை, வீரத்தை, கொடையைக் குறிப்பன. அடுத்த பதினெட்டும் கீழ்க் கணக்கு நூல்கள். இவை யாவும் அறத்தை, பொருளை இன்பத்தைக் குறித்து மக்களுடைய ஒழுக்கத்தை நிலை நிறுத்தத் தோன்றியவை. இப்பதினெட்டு நூல்களும்,

i

நாலடியார் 10. திணைமாலை நூற்றைம்பது நான்மணிக்கடிகை 11. திருக்குறள் இன்னாநாற்பது 12. திரிகடுகம் இனியவை நாற்பது 13. ஆசாரக் கோவை கார் காற்பது 14. பழமொழி களவழி காற்பது 15. சிறுபஞ்சமூலம் . ஐந்திணை ஐம்பது 16. கைந்நிலை

திணைமொழி ஐம்பது 17. முதுமொழிக்காஞ்சி 9. ஐந்திணை எழுபது 18. ஏலாதி

எனப் பெயர் பெறும்.

இவற்றுள் நான்மணிக்கடிகை இரண்டாவது நூலா கும். இதனைச் செய்தவர் ஆசிரியர் விளம்பி நாகனார். விளம்பி என்பது ஆசிரியரின் ஊராய் இருத்தல் வேண்டும். இந்நூல் தோன்றி ஏறத்தாழ ஆயிரத்து எண்ணுறு ஆண்டு கள் ஆயின. ஒவ்வொரு பாட்டிலும் நந்நான்கு நீதிகளைக் கூறுவதால் இது நான்மணிக்கடிகை எனப் பெயர்

பெற்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்மணிகள்.pdf/6&oldid=587181" இருந்து மீள்விக்கப்பட்டது