பக்கம்:நான்மணிகள்.pdf/7

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நான்மணிகள்

நான்மணிகள் என்பது நான்மணிக்கடிகை என்ற நூலின் மறு பிறவி, இதற்கு முன் என்னால் வெளியிடப் பட்ட மும்மணிகள், திரிகடுகம் என்ற நூலின் மறு பிறவி யாகும். அது இப்போது ஐந்தாம் பதிப்பாக வெளிவருகி றது. செலவான நூல்கள் 12000. அத்துறையில் இப்பணி இரண்டாவது பணி. மூன்றாவது பணி சிறுபஞ்சமூலம். அது ஐம்மணிகள் எனப் பெயர் பெற்று வெளிவரும்.

இந்நூல் கவிதையாக இருந்தமையால் புலவர்களால் மட்டுமே சுவைக்ககூடியதாய் இருந்து வந்தது. அதை எளிய நடையில் எழுதிப் பொதுமக்கள் அனைவரும் சுவைத்துப் பயனடைய வேண்டும் என்பதே இப்பணியின், நோக்கம்.

நேருக்கு நேராகப் பதவுரை பொழிப்புரை இன்றிக் கருத்துரையாகவே எழுதப் பெறுகிறது. பெரும்பான்மை யான கருத்துக்கள் நான்மணிக்கடிகையைத் தழுவியதா கவே இருக்கும். காலத்திற்கு ஏற்ப வேண்டாத சில விடப் பெற்றும் வேண்டிய சில வருவிக்கப் பெற்றுமிருக்கும்.

பழந்தமிழ் மக்களின் அன்பை, அறத்தை, பண்பை வாழ்வை நன்கறிய இந்நூல் பெருந் துணை செய்யும்.

ஒழுக்கம் என்பதே இன்னது என அறியாது தவறான வழியில் நெறி தவறி நடக்கும் பெரும்பான்மையான இன்றைய தமிழ் மக்களுக்கு-குறிப்பாக இளைஞர்களுக்கு இந்நூல் ஒரு நல்ல வழிகாட்டியாக இருக்குமென நம்ப லாம். .

சிறந்த குறிக்கோளை முன் வைத்து வெளிவருகின்ற இந்நூலின் சிறு பிழைகளைப் பொருட்படுத்த வேண்டாம் எனத் தமிழகத்தின் புலவர் பெருமக்களை வணங்கி வேண்டுகிறேன்.

திருச்சிராப்பள்ளி - தங்களன்பிற்குரிய, 1–9 - 1960 கி. ஆ. பெ. விசுவநாதம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்மணிகள்.pdf/7&oldid=587185" இருந்து மீள்விக்கப்பட்டது