பக்கம்:நான்மணிகள்.pdf/9

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நான் மணிக்கடிகை 7

எள்ள ற்க என்றும் எளியரென் றென்பெறினும் கொள்ளற்க கொள்ளார் கைம் மேலவா- உள்சுடினும் சீறற்க சிற்றிற் பிறந்தாரைக் கூறற்க கூறல் லவற்றை விரைந்து. (1)

பறைபட வாழா. வசுணமா, உள்ளம் குறைபட வாழார் உரவோர் - நிறைவனத்து

நெற்பட்ட கண்ணே வெதிர்சாம், தனக்கொவ்வாச்

சொற்பட வாழாதாஞ் சால்பு. . (2)

மண்ணியறிய மணிநலம், பண்ணமைத்

தேறிய பின்னறிப மாநலம் - மாசறச் - M.

சுட்டறிப பொன்னின் நலங்காண்பார் கெட்டறிப கேளிரான், ஆய பயன். (3)

கள்ளி வயிற்றி னகில்பிறக்கும் மான்வயிற்றின் ஒள்ளரி தாரம் பிறக்கும் - பெருங்கடலுள் பல்விலைய முத்தம் பிறக்கும், அறிவார்யார் நல்லாள் பிறக்குங் குடி. (4)

கல்லிற் பிறக்குங் கதிர்மணி, காதலி சொல்லிற் பிறக்கும் முயர்மதம் - மெல்லென்

றருளிற் பிறக்கு மறநெறி, எல்லாம்

பொருளிற் பிறந்து விடும். (5)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்மணிகள்.pdf/9&oldid=587192" இருந்து மீள்விக்கப்பட்டது