பக்கம்:நான் இருவர்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தான் இருவர் இந்த மாதிரி நடத்தை அட்டர்ஸனுக்குச் சுலபமானதே. ஏனெனில் அவர் எதையும் வெளிக் காட்டிக் கொள்வதில்லை. இந்த நல்ல குணத்தினால் தான் அவருடைய நட்புடைமைகளும் ஓலைத்து நின்றன. சந்தர்ப்பம் நேரும் போது தான் அடக்கமான மனிதன் தனது கண்டர் குழுவை விஸ்தரிக்கிறான் ; அதுதான் ஒரு வக்கீலின் வழியும். அவருடைய நண்பர்களெல்லாம் சொந்த பத்து ஐனங்கள்; அல்லது வெகுநாள் பரிச்சயமுள்ளவர்கள். அவருடைய அன்பு படர் கொடியைப் போல் நாளா வட்டத்தில் அனர்வ அதான், ஆனால் எல்லா விதத்திலும் இந்த அன்பு பொருந் தீப் போகும் என்பதில்லை. அவருடைய தூர பந்துவான ரிச்சர்ட் என் பீல்ட் என்பவரிடம் அவருக்கு உண்டான அன்புக்கு இதுவே தான் க¥ரணம். இந்த இரு நபர்களும் தமக்குள் ஒத்துப் போகக் கூடிங் அப்படிப் பட்ட விஷயம் என்ன என்பதும், இவ்விருவரும் எப்படி 'ஈட்புரிமை கொண்டாடுகிறார்கள் என்பதும் யாருக்கும் விளங்காத புதிர். ஞாயிற்றுக்கிழமை அவர்களிருவரும் உலவச் செல்வதைப் பார்த்தவர்கள் இதைத்தான் கண்டார்கள், அவர்கள் ஒருவருக் கொருவர் பேசிக் கொள்வதில்லை, தமக்குத் தாமே சலித்துப் போனவர். போல் செல்வார்கள், எதிரே நண்பர். யாரே தும் வந்தால் உ.லப்போடு வரவேற்பார்கள்.. இருந்தாலும், இந்த ஞாயிற்றுக்கிழமைச் சந்திப்பில் மட்டும் அக்கறையோடு இருந் தார்கள், அவர்கள் வாழ்வில் இன்றியமையாத சுகம் என அதைக் கருதினார்கள். அந்த நாளில் எந்தச் சோலியாயினும் 'போட்டு விட்டுப் போய் விடுவார்கள். அந்த இன்பத்தை முறிவின்றி 4: அனுபவிப்பதற்காக ! வழக்கம் போல் இவர்கள் ஒரு நாள் ரோந்து சுற்றி வரும் பொழுது, லண்டனில் ஜன நடமாட்டம் அதிகமுள்ள ஒரு பகுதியின் சந்தொன்றில் நுழைய நேர்ந்தது. அது ஒரு அமைதி நிறைந்த சின்னத் தெரு. ஓய்வு . 16ாள் தவிர மற்ற நாட்களில் அது நல்ல வியாபாரப் பகுதி, அந்தத் தெரு வாசிகள் ஒரோடு வாழ்பவர்கள் என்றும், முன்னேறுவதில் அக்கறை கொண்டவர்களென்றும் தெரிந்தது, அவர்கள் தங்களுடைய.) அமித லாபத்தை விளம்பரப் படுத்திக் காட்டி னார்கள், அதனால், அந்தத் தெருவில் புன்முறுவலோடு வரவேற்கும் அங்காடிப் பெண்களைப் போல, கடைகள் வரிசை யாக இருந்தன, ஞாயிற்றுக்கிழமையிலுங்கூட, அந்த இருள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்_இருவர்.pdf/10&oldid=1268732" இலிருந்து மீள்விக்கப்பட்டது