நான் இருவர் டர் லான்யன் வீட்டுக்கு நடந்தார், லான்யன் நல்ல வைத்தியர்; பல நோயாளிகள் அவரிடம் வருவார்கள், “ இந்த விஷயம் பற் றித் தெரிந்தவர் ஒருவர் உண்டென்றால், அது லான்யன் தான் " என்று அட்டர்ஸன் நினைத்தார். லான்யனுடைய பரிசாரகனுக்கு அட்டர்ஸனைத் தெரியுமாத லால் அவரை வரவேற்று, காலத்தைக் கடத்தாமல், லான்யன் தணியாக மது அருந்திக் கொண்டிருக்கும் அறைக்குள் அழைத்துச் சென்றான். அவர் ஒரு சுமுகமான ஆசாமி. திடகாத்திரமானவர். எனினும் அதற்குள் அவருக்கு நறை தட்டி விட்டது. முக:- சிவன் திருக்கும். பேச்சும் நடத்தையும் கணீரென இருக்கும். அட்டர்ஸ் னைக்கண்டதும், நாற்காலியிலிருந்து துள்ளியெழுந்து இருகரங்களை யும் நீட்டி அவரை வரவேற்றார் லான்யன், அந்த வரவேற்பில் சாகஸ்மும் நடிப்பும் இருந்தது; எனினும் உணர்ச்சியும் அவரை வரவேற்றது. இருவரும் வெகு காலத்துச் சிநேகிதர்கள். பள் ளிக் கூடத்திலும், கல்லூரியிலும் ஒன்றாய்ப் படித்தவர்கள். ஒரு வரை ஒருவர் மதித்து நடப்பவர்கள். மேலும், அவர்கள் பரஸ் பரம் ஒருவர் கூட்டுறவை மற்றவர் அனுபவித்து இன்புற்றர்கள், சில நிமிஷம் வம்பளந்த பிறகு வக்கீல், தமது' மனத்தைக் குடையும் அந்த விஷயத்தைப் பற்றிப் பேசத் தொடங்கினார், லான்யன்,. நாமிருவருந்தான் ஹென்றி ஜெயிலுக்கு நெருங் கிய, பழைய நண்பர்கள் இல்லையா ?
- 'இளைஞர்களான நண்பர்கள் இருந்தாலோ? , அது சரி.
அவனுடைய நண்பர்கள் நாம்தான். அதற் கென்ன ? இப்போ தெல்லாம் அவன் என் கண்ணில் படுவதுகிட்ட இல்லை.” "அப்படியா? உங்கள் இருவருக்கும் நெருங்கிய தொடர்பு இருக்குமென் றல்லவா நினைத்தேன் ?” இருந்தது. ஆனால், நானும் அவனும் நெருங்கிப் பழகியே பத்து வருடங்களுக்கு மேலாகி விட்டது. அவன் போக்கே மாறி - விட்டது. புத்தி மாறிப்போய்விட்டது. எனினும் பழைய . தொடர்பின் காரணமாக அவன் மீது எனக்கு அக்கறை இருக்கத் தான் செய்கிறது. அவனைக் காணுவதே', இப்போது அபூர்வ மாகி விட்டது. இந்த விஞ்ஞான ஆராய்ச்சியின் அரைகுறைப்