பக்கம்:நான் இருவர்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லிருந்தும் கூட அவனுடைய பார்வை அட்டர்ஸனை உலுப்பியது. ஆனால் அந்த மனிதனோ தெருவைக் குறுக்காகக் கடந்து வாச லுக்கு வந்தான். வந்த வுடன் சர்வ சாதாரணமாய் வீட்டுக்கு வருபவன் போல, பையிலிருந்து சாவியை எடுத்தான். அட்டர்ஸன் தமது இடத்திலிருந்து வெளிவந்து, அவ னு டைய தோளைப் பற்றினார். “தாங்கள்தானே, மிஸ்டர் ஹைட் ? என்று கேட்டார். - ஹைட் திடுக்கிட்டுப்போய்ச் சீறிக்கொண்டே பின் வாங்கி னான். அவனுடைய பயமோ, அந்த ஒரு நிமிஷத்தோடு சரி. மறு நிமிஷம் அவன் வக்கீலை நேருக்கு நேர் பார்க்காமல், “ஆமாம், அதற்கென்ன உங்களுக்கு?” என்று சாவதான மாகச் சொன் னான்.

  • நீங்கள் உள்ளே போகப் போவதைப் பார்த்தேன். நான்

டாக்டர் ஜெகிலின் வெகு காலத்து நண்பன்--காண்ட் தெருவி லிருக்கும் அட்டர்ஸன். தாங்கள் என் பெயரைக் கேள்விப்பட் டிருப்பீர்கள். தங்களைச் சாவதானமாகச் சந்தித்துப் பேச ஆசை. செளகரியப்படுமென நினைக்கிறேன்" என்றார். "டாக்டர் ஜெகில் வீட்டிலில்லையே' என்று கூறிக் கொண்டே, சாவித் துவாரத்தை வாயில் வைத்து சீட்டி 2 தி னான். ஹைட். பிறகு, நிமிர்ந்து பாராமல், "என்னை உங்களுக்கு எப்படித் தெரியும் ?" என்று கேட்டான். " பதிலுக்கு, தாங்கள் ஒரு உபகாரம் செய்ய முடியுமா ?"

  • தாராளமாக-என்ன அது ?"

“ தங்கள் முகத்தை நான் பார்க்கலாமா?" முதலில் ஹைட் தயங்குவது போல் தோன்றினான். பிறகு, திடீரென முகத்தை அநாயாசமாக முன்புறம் திருப்பினான், இருவரும் ஒருவரை ஒருவர் அசையாமல் சில நிமிஷ நேரம் பார்த்த னர். " போதும். தங்களை இனிமேல் அடையாளம் கண்டு கொள்வேன். சமயத்துக்கு உதவும் ” என்றார் அட்டர்ஸன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்_இருவர்.pdf/23&oldid=1268746" இலிருந்து மீள்விக்கப்பட்டது