பக்கம்:நான் இருவர்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தான் இருவர் ஹைடின் பெயரைக் கேட்டவுடனேயே அட்டர்ஸன் நடு நடுங்கிப் போனார். அந்த முறிந்துபோன பிரம்பைக் கண்டதும் Satகுடைய சந்தேகமும் நிவர்த்தியாயிற்று. ஒடிந்து, சிலும்ப லாயிருந்தஈலும் அவர் அந்தத் தடியை அடையாளம் கண்டு பிடிக்க முடிந்தது. பல வருடங்களுக்கு , முன்னால் அவர் (ஹென்றி ஜெல்லுக்கு அளித்த பரிசு, அது !

  • $தைலட் என்பவன் என்ன ? குள்ளமான, ஆசாமியா?

என் து கேட்டார். “ குட்டைதான் என்றும், பார்ப்பதற்கே கொடியவன் என் றும் இந்த வேலைக்காரப் பெண் சொன்னாள் என்றார் ஆபீஸர். வக்கீல் யோசித்தார். பிறகு தலையை உயர்த்தி, " என் கானல் வாருங்கள். அவர், இருக்குமிடம் போகலாம் என்றார், இதற்குள் காலை மணி ஒன்பது ஆகிவிட்டது. அந்தப் பரு. வத்து மூடுபனி அன்று தான் மூட்டம் விரித்தது. சொர்க்கத் நிஷ்:தந்து இறக்கிய திரைபோல் அந்தப் பனி ' கவிந்திருந்த து. ஆனால் காற்று மட்டும் அந்தப் பனிப்புகையை உலைத் தெறிந்து எவைத்துக் கொண்டிருந்தது. ஒவ்வொரு தெருவாய் வண்டி நகர்ந்தது. அஸ்தமன காலத்து வர்ண ஜாலங்களைப்போல் பல் வர்ணக் கலவைகள் அவர் கண்களில் பட்டன. ஒரு பக்கம் ஜோதிப் பிழம்பான ஒளி கதிர் வீசுவது போலிருந்தது. வேறோ ரிடத்தில் கலைந்துபோன பனி மூட்டத்தின் வழியாக, வெளிறிப் போன காலைக் கதிர்கள் சோர்ந்து தாவிக் கொண்டிருந்தன. ஸோனோப் பிரதேசம் முழுவதும் சதசதப்பாயிருந்தது. மக்கள் அலங்கோலமாய்ச் சென்றார்கள்; இரவு ஏற்றிய விளக்குகள் இன் னும் அணைக்கப்படாமல் எரிந்து கொண்டிருந்தன. ஒரு வேளை, பனி மூட்டத்தின் இருளை எதிர்பார்த்து. ஏற்றியதாகவும் இருக்கலாம். அந்தப் பிரதேசமே ஒரு பேய்க்கனவுபோல் வக்கீ' அக்குத் தோன்றிற்று. அவருடைய சிந்தனைகள் சோகத்தால் மங்கிக் கிடந்தன, இந்த' நிலைமையில், பக்கத்திலிருந்த போலீஸ் உத்தியோகஸ்தரைப் பார்த்ததும் அவர் திடுக்கிட்டார்.. ஒரு காரணமுமில்லாத இந்தப் பயம் சமயங்களில் யாருக்குமே ஏற்படுவதுண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்_இருவர்.pdf/34&oldid=1268758" இலிருந்து மீள்விக்கப்பட்டது