பக்கம்:நான் இருவர்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான் இருவர் பருமாகிய அம் கடத்தில் அடி ரிகை விற்கும் பையன்கள் நடைபாதையில் நின்று கொண்டு உரக்கக் கத்தினார்கள் : " விசேஷப். பதிப்பு ! பார்லிமெண்டர் அங்கத்தினரின் பரிதாபக் கொலை !" தமது கட்சிக்காரனும் நண்பருமாகிய ஒருவருக்கு ஒருபுறம் ஈமக்கடன்; மறுபுறம் இன் (னொரு நண்பனும் கட்சிக்காரனுமான ஒருவரின் நல்ல பெயர் இந்தக் கொலை விவகாரத்தில் அடிபட்டு கேவலப்படுமே என்ற கவலை. இது விஷயத்தில் அவர் ஒரு முடிவுக்கு வருவதே பெரும் பாடாய் விட்டது. பல விஷயங்களில் தன்னையே நம்பக்கூடிய "வராயிருந்தும், இது விஷயத்தில் யாரோடேனும் கலந்து யோசித்தால் தான் நல்லது என்று பட்டது. ஆனால், அத்தனை தூரம், நேரடியாய் அதை நடத்திவிட முடியாது. எனினும், இதற்குத் தூண்டில் வீசித்தான் ஆகவேண்டும் என் நினைத்தார். சிறிது நேரத்துக் கெல்லாம் அவர் தம் வீட்டுக் காட்டிக் குழியருகே, தமது தலைமைக் குமாஸ்தா கெஸ்ட் எதிர்ப்புற மிருக்க, அமர்ந்திருந்தார். இருவருக்கும் இடையிலுள்ள இடத் தில் வெகு நாட்களாய் பூமிக்குள் புதைத்து வைக்கப்பட்ட மதுப்புட்டி இருந்தது, நகரத்தின் மீது பனிமூட்டம் இன்னும் சிறை விரித்துத்தான் கிடந்த து. நகரத்து விளக்குகள் மணி விளக்கம் போலத் தோன்றின. அந்தப் பனிமூட்டத்திலும், படிப்பிலுங்கூட, நகரத்தின் இரைச்சலும் நடமாட்டமும் குறைய வில்லை. இரத்தக் குழாய் போன்ற தெருக்களில் மனித வெள் ளம் ஓடிக்கொண்டுதானிருந்தது, அந்த அறை கணப்பிள் நெருப்பால் ஒளி பெற்றிருந்தது. அந்தப் பழம் மதுவின் சாரம் பல நாள் பூமிக்குள் இருந்ததால், குறைந்துவிட்டது; சிறமும் வெளிறி விட்டது. , மலைக்குன்றின் அடிவாரத்திலே உண்டான? இலையுதிர் காலத்து மாலை ஒளி, விடுபெற்று வந்து லண்டனில் கவிந்து கிடக்கும். மூடுபனியைக் கலைத்தெறிய முயல்வதுபோல், அந்த மது இருந்தது. வக்கீல் தம்மையும் மறந்து தம்முள் மனம் இளகினார். கெஸ்ட்டைப்போல் வேறு யாரிடமும் அவர் தமது ரகசியங்களை உடைத்துச் சொன்னதில்லை. தமது கட்டுப் பாட்டையும் மீறி, சில விஷயங்களை அவரிடம் கூறியிருக்கிறார், கெஸ்ட் கேஸ் விஷயமாக, ஜெகிளின் வீட்டுக்குப் போவதுண்டு. பூலையும் அவர் அறிவார். ஹைடுக்கு அங்குள்ள செல்வாக்கைப் பற்றியும் அவர் அறியாமலிருக்க முடியாது. இது விஷயமாய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்_இருவர்.pdf/41&oldid=1268765" இலிருந்து மீள்விக்கப்பட்டது