பக்கம்:நான் இருவர்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தான் இரு வர் , வாங்கி விட்டேன். நான் தான் உலகிலேயே கொடிய பாதகன்" என்றால், நான்தான் உலகிலுள்ள கொடிய நரக வேதனைக்கும் - ஆளானவன். மனிதனையே உருக்குலைக்கும் பீதியும், துன்ப. மும் இவ்வுலகில் இவ்வளவு நிறைந்திருக்கும் என்று என்னால் எண்ணவே முடியவில்லை, அட்டர்ஸன், என் தனிமையை நீ மதித்து நடந்தால், என் தலைவிதியை நீ ஓரளவு குறைக்கலாம்" என்று. ஜெகில் எழுதியிருந்தார். அட்டர்ஸன் பிரமித்துப் போனார்.' ஹைடின் . ஆதிக்கத்திலிருந்து விடுபட்ட ஜெகில், முன் மாதிரி வெளி வந்து பழகினாரே. ஒரு வாரத்துக்கு முன் கூட, வயது காலத்தின் அமைதியும் களிப்பும் ஏற்பட்டிருந்த து போலிருந்ததே, அதற்குள்ளாகவா. அந்த நட்பு, மன அமைதி, வாழ்வின் கதி எல்லாம் சிதறித் திசைமாற வேண்டும்? இப் படிப்பட்ட பெரும் மாற்றம் பைத்தியத்துக்குத்தான் அறிகுறி, ஆனால் லான்யனுடைய நடவடிக்கையையும். பேச்சையும் கவ னித்தால், இதற்கெல்லாம் வேறு ஏதோ ஆழ்ந்த . காரணம் இருக்கிறது என்றுதான் படுகிறது. ஒரு வாரம் கழித்து டாக்டர் லான்யன் படுக்கையில் இடர் தார் ; இரண்டு வார காலத்துக்குள் அவர் இறந்து போனார். "பிரேத அடக்கம் ஆன - மறுநாள் இரவு. அட்டர்ஸன் கவலை தோய்ந்தவராய், தாளிடப்பட்ட தமது அறைக்குள்ளே, மங்கி யெரியும் மெழுகுவத்தி' ஒளியில் அமர்ந்திருந்தார். தமது இறந்து போன நண்பரின் சொந்தக் கைப்பட எழுதப்பட்டு, முத்திரை யும் வைக்கப்பட்டிருந்த ஒரு கவரை எடுத்தார். அதன்மேல், “. அந்தரங்கம்: ஜே. ஜி. அட்டர்ஸனுக்கு மட்டும். எனக்கு முன் அவர் இறந்தால், இதை. உடைக்கப்படாமலே அழித்து விட வேண்டியது" என்ற குறிப்புக் காணப்பட்டது. அட்டர்ஸன் அதை உடைத்து, அதிலுள்ளவற்றைப் படித்து அறிந்துகொள் ளவே. நடுங்கினார். " இன்று என் நண்பன் ஒருவன்' புதையுண் டதைப் பார்த்தாய் விட்டது. இதில் இன்னொரு நண்பனின் முடிவு இருக்குமோ?” என்று எண்ணினார். பிறகு அந்தப் பயம் தமது நாணயத்துக்கு நல்லதல்ல என்று மனத்தில் படவே, முத்திரையை உடைத்தார். அந்தக் கவருக்குள் மற்றொரு கவர் இருந்தது. இதே மாதிரி அதற்கும் ஒரு முத்திரை; ஒரு குறிப்பு: "டாக்டர் ஹென்றி ஜெகில் இறக்கும் வரையிலோ, மறையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்_இருவர்.pdf/47&oldid=1268771" இலிருந்து மீள்விக்கப்பட்டது