பக்கம்:நான் இருவர்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தான் இருவர் - கடைசி இரவில்- ஒரு நாள் மாலை சாப்பாட்டிற்குப் பின் அட்டர்ஸன் கணப் - புக் குழியருகே உட்கார்ந்திருந்தார். அப்போது பூல் எதிர்பாராத விதமாய் அங்கு வந்து சேர்ந்தான், என்னப்பா, பூல் : என்ன விஷயம்?” என்று கேட்டுவிட்டு, "செளக்கியந்தானே, டாக்டருக்கு உடம்பு சௌக்கியமில் லையா ?” என்றார், " ஸார், ஏதோ பெரும் தவறு ஏற்பட்டிருக்கிறது." " உட்கார். இந்த மதுவை அருந்து. நீ சொல்ல விரும்புவதை ஆர அமரச் சொல்லு.” " உங்களுக்குத்தான் டாக்டருடைய போக்குத் தெரியுமே-~- அவர் அடைத்துக் கொண்டு கிடப்பதை. இப்போதும் அப்படித் தான். இதுமாதிரி இருப்பது எனக்குப் பிடிக்கவில்லை. ஸார். இதை விட நான் செத்துப் போகலாம் போலிருக்கிறது. எனக்கு ஒரே படமாயிருக்கிறது, அட்டர்ஸன் என்றால் " தெளிவாய்ச் சொல்லு. நீ எதைக் கண்டு பயப்படுகிறாய்?" ", ஒரு காரமாய் எனக்கு ஒரே பயமாயிருக்கிறது, , ஸார். என்னால் இதைத் தாங்க முடியாது " என்று அவர் சொன்ன தைக் காதில் வாங்காமலே பேசினான். அவனுடைய தோற்றமே அவனுடைய பேச்சை மெய்ப் பித்தது. அவனுடைய நடத்தை, 'கூடச் சிதைவுற்றிருந்தது. அவனுடைய பயத்தைப் பற்றிச் சொன்ன அந்த ஒரு கணத் தவிர, அவன் வக்கீலை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அந்த மதுக் கோப்பையில் இன்னும் வாய் வைக்காமலேயே இருந்தான்; அவனுடைய பார்வை எங்கோ ஒரு மூலையில் பதித்திருந்தது. - “ இதை என் னால் தாங்க முடியாது ஸார்” இதை அவன் திரும்ப வும் சொன்னான், " நீ சொல்வதில் அர்த்தமிருக்கிறது என்பதை நான்

  • உணர்கிறேன். ஏதோ பெரும் தவறு நடந்துவிட்டது என்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்_இருவர்.pdf/51&oldid=1268775" இலிருந்து மீள்விக்கப்பட்டது