பக்கம்:நான் இருவர்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தீரன் இரு வர் மாய் நடந்து வந்த தனால் வியர்த்த துளிகளல்ல அவை ; இதயத் தைப் பிழியும் பயங்கரத்தினால் ஏற்பட்ட வியர்வைதான் அது. அவன் முகம் வெளுத்துவிட்டது; குரல் கரகரத்து உடைந்து போயிருந்தது. " வந்துவிட்டோம். கடவுள் கிருபையால் இங்கு எதுவும் தப்புத் தண்டா நடந்திருக்கக் கூடாது, ஸார்" என்றான் அவன். என் பிரார்த்தனையும் அதுதான், பூல் !" என்றார் வக்கீல், வேலைக்காரன் கதவை மெதுவாய்த் தட்டினாள். கதவும் மெதுவாய்த் திறக்கப்பட்டது. உள்ளே இருந்து ஒரு குரல் "பூல், நீ தானா ?” என்றது, " ஆமாம். கதவைத் திற." ஹாலுக்குள் அவர்கள் நுழைந்தார்கள். அங்கு விளக்குகள் ஏற்றப்பட்டு ஒளிமயமா யிருந்தது. கணப்புத் தீ உயரமாக எரிந்து கொண்டிருந்தது. கணைப்பைச் சுற்றி வேலைக்காரர்கள் எல்லோரும் ஆட்டுமந்தை போல் குழுமிக் கிடந்தார்கள், அட்டர் ஸனைக் கண்டவுடன் வேலைக்காரி, " மிஸ்டர் அட்டர் n னா ?"" என்று கூவிக்கொண்டே, அவரைத் தழுவ வருவது போல் ஓடி. வந்தாள், " என்ன ? நீங்கள் எல்லோருமே இங்கே கூடி, இ நக் கிறீர்கள், ரொம்ப மோசம். கொஞ்சங் கூடப் பொறுப்பின்றி- உங்கள் எஜமானருக்கு. இப்படித்தான் சேவை செய்கிறதோ !" என்று கேட்டார் அட்டர்ஸன். “ எல்லோருக்கும் ஒரே கிலீ, ஸார்" என்றான் பூல். மெளனம் குடிகொண்டது. யாரும் பதில் சொல்லவில்லை.. ' வேலைக்காரி மட்டும் திடீரென்று வாய்விட்டு அழ ஆரம்பித்து விட்டாள், "சீ. வாயை மூடு" என்று அதட்டினான் பூல். அவனுடைய நரம்புகள் எவ்வளவு தளர்ச்சியடைந்திருந்தன என்பதை அந்தக் குரலே காட்டிற்று. அந்தப் பெண் இப்படிக் குரலெழுப்பி அழவே எல்லோரும் ஏதோ ஒரு விபத்தை எதிர்நோக்கு பவர்கள் போல், அந்த உள் கதவை உற்றுப் பார்த்தார்கள். பூல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்_இருவர்.pdf/53&oldid=1268777" இலிருந்து மீள்விக்கப்பட்டது