பக்கம்:நான் இருவர்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

" பார்த்திருக்கிறாயா ? பிறகு-" “ இப்படித்தான் ஒரு நாள்-தோட்டத்திலிருந்து நான் ஆபரேஷன் தளத்தருகே வந்துவிட்டேன். அப்போது ஏதோ ஒரு மருந்தையோ, வேறு எதையோ தேடுவதற்காக வெளியே வந்திருக்கிறார். ஏனெனில் அந்த அறைக் கதவு திறந்து கிடந்தது. அவரும் அறையின் கடைக் கோடியில், சீசாக்கள் டையே எதையோ உருட்டிக் கொண்டிருந்தார். நான் வந்ததை அவர் நிமிர்ந்து பார்த்தார். உடனே ஒரு மாதிரியாகக் கத்தினார். மாடிப்படி வழியாக ஏறி ஓடி அறைக்குள் மறைந்து விட்டார். ஒரே ஒரு கி.மீ ஷந்தான் அவரை நான் பார்த்தேன். ஆனால் அவ ரைப் பார்த்தேனோ என்னவோ மண்டை மயிரெல்லும் குத் திட்டு விறைத்து நின்று விட்டன. ஸார், அவர் தான் கான்னு" டைய எஜமானரென்றால், முகத்துக்கு ஏன். மூடி போட்டிருக்க வேண்டும் ? அவர்தான் என் எஜமானரென்டில், என்னைக் கண்டவுடன் ஏன் 5எலிமாதிரிக் கத்திக்கொண்டு ஓடி ஒளியூர் வேண்டும் ? எவ்வளவு காலமாய் நான் அவரிடம் வேலை? பார்த்திருக்கிறேன். வந்து-" என்று ஆரம்பித்த வன் ஐ.ணர்ச்சி மேலீட்டால் பேச முடியாமல், முகத்தை மூடிக் கொண்டான்." " இவை யெல்லாம் விசித்திரமான சம்பவங்கள் தான்" ஆனால், எனக்கு இப்போதுதான் விஷயம் ஓரளவு தெளிவா' கிறது. பூல், உடலமைப்பையே நாசமாக்கி, நோயாளியைக் கொடும் வேதனைக்குள்ளாக்கும் வியாதிகளைப் பற்றி உனக்குத் தெரியுமா ?. அதுமாதிரி ஏதோ ஒரு வியாதிதான் உன் எஜமான ரைப் பிடித்திருக்கிறது. ஆகையால்தான் குரலிலும்கூட ஒரு மாறுதல். அதனால்தான், முகமூடி யும்,' நண்பர்களைப் பார்க்க மறுப்பதும், எல்லாம் இந்த மருந்து கிடைத்தால் குணமாகும் என்று பாவம், அவர் நம்புகிறார் போலும். கடவுள் அவர் எண் ணம் போல் நடக்கச் செய்யட்டும். இது தான் என்னுடைய முடிவு. இதுகூட வருந்தத் தக்கது தான். இந்தக் காரணம் ஒன்றுதான் இயற்கைக்கு விரோதமில்லாமலும், சாத்தியமான. தாகவும் இருக்கிறது. இந்த உணர்ச்சி நம்முடைய பீதியைப் போக்கடிக்க வில்லையா?” என்றார். - " ஸார். இது என் எஜமானரல்ல தான். உண்மை இது தான்.” என்று பயமடித்த முகத்தோடு சொன்னான். " என்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்_இருவர்.pdf/57&oldid=1268781" இலிருந்து மீள்விக்கப்பட்டது