பக்கம்:நான் இருவர்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான் இரு வர் " நாமிருவரும் மனம் விட்டு இப்1ே.IT.து பழகுவ். துதான் நல்லது. நாம் பேசியதைவிட, மனத்தில் தான் பல விஷயங்கள் இருக்கின்றன. நாம் 2னர் திறந்து பேசி விடுவோம். நீ கண் டாயே, அந்த முகமூடி உருவம். அதை நீ அடையாளம் கண்டு கொள்ள முடிந்த தா ?" “ அது எத்தனை விரைவாய்ச் சென்றது ! ஒரே ஓட்ட மல்லவா. ஓடிய து ! ஆதலால், அதைப் பற்றித் திட்டமா? எதுவும் சொல்ல முடியாது. அது தான் மிஸ்டர் ஹைட் என்று தாங்கள் நினைக்கிறீர்களா ?-ஆம் அது ஹைடேதான் ஸார். அதே பருமன். அதே மாதிரி விருட்டென்று தாவிச் செல்லும் நடை. மேலும் வேறு யார் லார், ரசாயனசாலை வழியாக உள்ளே வர முடி...ம்? கொலை நடந்த காலத்தில்கூட, அந்த வாசற் கதவின் சாவீ அவரிடமேதான் இருந்தது. நீங்கள் அதை மறந்து விடவில்லையே, ஸார் ! அது மட்டுமல்ல. நீங்கள் அவரை எப்போதாவது சந்தித்திருக்கிறீர்களா ?" “ஆம். ஒரு தடவை அவரோடு நான் பேசியுமிருக்கிறேன்.” “ பின் உங்களுக்கும் எல்லோரையும் போல் தெரிந்திருக்க வேண்டுமே அந்த மனிதனின் விசேஷத்தை ! அவரைப் பார்ப் பவனுக்கு ஒரு சிலிர்ப்பு ஏற்படும். அந்த உணர்ச்சியை என் ன வென்று என்னால் சொல்ல முடியவில்லை, எலும்புக் குருத் துக் குள் ஏதோ' சில்லிட்டு ஊடுருவிப் பாய்வதைப்போல், உணர்த் , திருப்பீர்களே.” " நீ சொல்வது மாதிரி உணர்ச்சி ஏற்பட்டதும் உண்மை தான்.” “ நிச்சயமாய், ஸார் அந்த முகமூடி உருவம் குரங்கைப் போலக் குதித்தோடி, அறைக்குள் ..!ாய்ந்தோடியதும் என் முது கெலும்புக்குள் ஐஸைச் சொருகுவது போலிருந்தது, ஆனால், இது போதுமான சாட்சியமாகாது. அவ்வளவுக்குக்கூட, நான் கற்றுக் கொள்ளாமலா போய்விட்டேன்? ஒரு மனிதனுடைய ஆத்ம உணர்ச்சி சாட்சி சொன்னால் போதாதா ? அது ஹைட் தான் என்று உறுதி கூறுகிறேன் அட்டர்ஸன் !"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்_இருவர்.pdf/59&oldid=1268783" இலிருந்து மீள்விக்கப்பட்டது