பக்கம்:நான் இருவர்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான் இருவர் கொடுத்திருப்பானே, அதைப் பார். மேலும் விசேஷத் தகவல்கள் வேண்டினால் யோக்கியதையும், மகிழ்ச்சியுமற்ற '. இந்தப் பேதை நண்பனின் வரலாற்றையும் படி. ஹென்றி ஜெகீல். " இன்னொரு கடிதமும் இருந்ததா?" என்றார் அட்டர்ஸன். " இதோ இருக்கிறது, ஸார் " என்று பூல் பல இடங்க ளில் முத்திரை. யிடப்பட்டிருந்த கனத்த கவரைக் கொடுத்தான். வக்கீல் அதைப் பையில் போட்டுக் கொண்டார். இதைப் பற்றி நான் வெளியில் சொல்லப் போவதில்லை, உன் 6ாஜமான் உயிர் துறந்திருந்தாலும், ஓடியிருந்தாலும், நாம் அவருடைய பெருமையையும் மதிப்பையும் காப்பாற்றியாக வேண்டும். இப் போது, மணி பத்து. நான் வீட்டுக்குச் சென்று. இவற்றை உட னடியாகப் படித்து ஆக, வேண்டும். நள்ளிரவுக்கு முந்தியே நான் வந்து விடுவேன். அதன் பின்னர் போலீஸுக்குத் தகவல் கொடுக்கலாம்" என்றார். இருவரும் கதவைப் பூட்டிக்கொண்டு வெளியே வந்தனர். வேலைக்காரர்கள் - மறுபடியும் கணப்புக் குழியருகே குழுமி னார்கள். அட்டர்ஸன் அந்த இரண்டு தஸ்தாவேஜிகளையும் படிப்பதற்காக விறுவிறு என்று வீட்டுக்கு நடந்தார், லான்யன் கண்டறியாதன கண்டார் ! நான்கு நாட்களுக்கு முன், ஐனவரி ஒன்பதாந் தேதியன்று மாலைத் தபாலில் எனக்கு ஒரு ரிஜிஸ்தர் கவர் வந்தது. அதை எழுதியது என்னுடைய தொழில் முறைத் தோழனும், பள்ளித் தோழனுமான ஹென்றி. ஜெகில், அந்தக் கடிதம் எனக்குப் பேராச்சரியம் அளித்தது. ஏனெனில் நாங்கள் இருவரும் கடிதம் போக்கு வரத்தே வைத்துக் கொள்ளவில்லை. அதற்கு முந்திய நாள் இரவில் தான் நான் அவனோடு விருந்து சாப்பிட்டேன். அப்போது பேசிக் கொண்ட பேச்சில் இது மாதிரியான ஒரு ரிஜிஸ்தர் கடிதத்துக்கு எந்தவித அவசியமும் ஏற்படப் போவு தாகத் தோன்றவில்லை. கடிதத்திலிருந்த விஷயம் என் திகைப்பை மேலும் அதிகமாக்கியது. அந்தக் கடிதம் இதுதான் :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்_இருவர்.pdf/67&oldid=1268792" இலிருந்து மீள்விக்கப்பட்டது