பக்கம்:நான் இருவர்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 ${ன் இரு வர் 10, டிஸம்பர் 18- அன்புள்ள லான்யனுக்கு, நீ என்னுடைய பழைய சிநேகிதர்களில் ஒருவன், விஞ்ஞா னப் பிரச்சினைகளில் நமக்குள் எத்தனையோ அபிப்பிராய பேதங் கள் ஏற்பட்டிருக்கலாம். ஆனால், நமது நட்புரிமையில் எந்தவித பேதமோ, பிளவே!" ஏற்பட்டதாக நான் கருதவில்லை. என்றே லும் ஒரு நாள், நீ என்னிடம், "ஜெயில், என் வாழ்க்கை , என் கேலா ரவம், என் அறிவு எல்லாம் உன் கையிலே இருக்கின்றன" என்று செல்ல நேர்ந்திருந்தால், என் சொத்து முழுவதையும் 2.ன்னைக் காப்பாற்றுவதற்காகத் தியாகம் பண்ணியிருப்பேன். சன்யான், இப்போது என் உயீர், என் கெளரவம், என் அறிவு எல்லாம் உன் R.தவியை நாடி நிற்கின்றன. இன்றிரவு எனக்கு 6 இரங்காவிட்டால், நான் அடியோடு தொலைந்து போவேன். இப்படிப்பட்ட பீடிகையைக் கண்டு, நான் ஏதோ 1.மரியாதைக் குறைவான செயலைச் செய்யச் சொல்லுகிறேன்' என்று எண் ஹாதே. நீயே அதைத் தீர்மானித்துக் கொள். இன்றி ) / நீ எல்லாவித அலுவல்களையும் எனக்காக ஒதுக்கி வைக்க வேண்டும். சாகக்கிடக்கும் சக்கரவர்த்தியிட மிருந்து அழைப்பு வந்தாலும் செல்லக் கூடாது. உன் வண்டி தயாராயில்லை யெனில், வேறொரு வண்டியிலேனும் என் வீட் இக்குப் போ. இந்தக் கடிதத்தைக் கையோடு உதவிக்காகக் கொண்டு செல். என் வேலைக்காரன் பூலுக்கு நான் வேண்டுவன் செய்யும்படி உத்தரவிட்டிருக்கிறேன். அவன் அங்கு ஒரு பூட்டு 4சிப்பேர்க்காரனுடன் காத்திருப்பான். அவனைக் கொண்டு, என் அறைக் கதவை உடையுங்கள். நீ மட்டுமே உள்ளே தனியாகச் செல்ல வேண்டும். இடது கைப்பக்கம் E என்ற அடையாள மிட்ட அலமாரியை, அது பூட்டிக் கிடந்தாலும் சரி, அதை உடைத்துத் திறக்கவும். அந்த டிராயரை அதிலிருக்கும் சாமான்க ளோடு அப்படியே வெளியே எடுக்கவும், கீழிருந்து அது மூன்றா வது டி.ராயர். மேலிருந்து அது நாலாவது, என்னுடைய மனச் சஞ்சலத்தில் எங்கே உனக்குத் தப்பான விவரம் கொடுத்துவிடு 'கிறேனோ என்றுகூட அஞ்சுகிறேன், நான் தப்பிதமாகவே அடையாளம் கூறிவிட்டாலும்கூட நீ அந்த டிராயரை அதிலிருக் கும் சரக்குகளைக் கொண்டே கண்டு பிடித்து விடலாம். அதில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்_இருவர்.pdf/68&oldid=1268793" இலிருந்து மீள்விக்கப்பட்டது