பக்கம்:நான் இருவர்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வார்த்தைகளில் எழுதினார். நண்பர்களிடம் வாசித்துக் காட்டி னார். ரசிகையான தமது மனைவியிடமும். வாசித்துக் காட்டினார், அவள் கூறிய குறையை, இவர் தமது நூலில் கண்டதாலோ, தமக்கே திருப்தி இல்லாததாலோ, அந்தக் கதையைத் தீயிலிட்டுக் கொளுத்தி விட்டார். மறுபடியும் உட்கார்ந்து எழுதிய கதை தான் நீங்கள் படிக்கப் போகும் “ நான் இருவர் ".

  • - ஸ்டீவென்ஸனின் கதைகளில் இதுவே முதல் தரமானது

அல்ல என்றாலும், இது தான் எந்தக் காலத்திலும் நிலைத்து நிற் கும் வலிமையும் கருத்தாழமும் பெற்றது எனச் சொல்லலாம். ' கதையைப் பொறுத்த வரையில், பழைய பாணியிலிருந்து ஓரளவே, விலகியது எனலாம். முகமூடி அணிந்து தீச் செயல்கள் : புரிவதும், பிறகு நல்ல பிள்ளையாய்த் திரிவதும், கடைசியில் உண்மை வெளியாகி, கதை கொட்டு மேளத் தோடு 'முடிவது மான ஒரு சம்பிரதாய பாணி இருக்கிறதே, அது L.மாதிரி தான். இதுவும். ஆனால் இவர் கதையில் - கையாண்டுள்ள கருத்தின் காரண மாக, கதையில் பிரமாதமான ஆவலுணர்ச்சியும்,' இ.றுதி யில் தரும் ஜெயத்துக்குப் பதிலாக, இரண்டின் மறைவும் வந்து - சேர்கின்றன. கதையின் ஊடே பாவு நூல் போலப் பின்னிக் கிடக்கும் மனோதத்து வந்தான் கதைக்கு ஜீவன் அளித்து, சிரஞ்சீவித் தன்மை தருகிறது. மற்றப்படி, கதையில் வரும் பயங்கரம் கூட, நாம் எதிர் பார்க்கும் அளவுக்கு இல்லை ; அதற்குப் பதிலாக கதை முழுவதும் அந்த அதிசய திராவகத்தின் நெடி தான் வீசுகிறது. மனிதனின் இந்தத் இரட்டைக் குணத்தை ஸ்டீவென்ஸன் இந்த ஒரு நூலில் மட்டும் கையாளவில்லை. வேறு நூல்களிலும் இந்த வாடை அவருக்குத் திட்டியிருந்தது, காரணம், ஸ்டீவென் ஸணின் வாழ்க்கை முழுவதிலுமே உள்ளத்துக்கும், உடல் நிலைக் கும் ஒரு விதமான தொடர்பு இருந்தே வந்திருக்கிறது. இந்தக் கதை அந்த மாதிரி ஒரு உணர்ச்சியின் மேல் எழுந்த கனவாகக் கூட இருக்கலாம். கதையிலுள்ள கருத்து நமது சிந்தனையைக் கவர்கிறது. இரட்டை மனித சுபாவம் நாம் நமது நாட்டுக் கதைகளிலேயே கண்டது தான், கூடுவிட்டுக் கூடு பாயும் விக்ரமாதித்தன்கதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்_இருவர்.pdf/7&oldid=1268729" இலிருந்து மீள்விக்கப்பட்டது