பக்கம்:நான் இருவர்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான் இரு வ ர். தான். வெகு சமீபத்தில் ஒரு போலீஸ்காரன் பரக்கப் பரக்க விழித்துக்கொண்டு வந்து கொண்டிருந்தான். அவனைக் கண்ட வுடன் வந்தவன் விருட்டென்று உள்ளே வந்து விட்டான். இதெல்லாம் எனக்குப் பிடிக்கவே இல்லை. அந்த ஒளி நிறைந்த அறைக்குள் நான் அவனைத் தொடர்ந்து வந்தவுடன் என் கை துப்பாக்கியைத் தயாராய்ப் பற்றிப் பிடித்த து. இங்கு தான் நான். அவனை நன்றாகப் பார்க்க முடிந்தது. அதற்கு முன் அவனை நான் நேருக்கு நேராய்ப் பார்க்கவில்லை. அவன் குள்ளமா யிருந்தான். திறக்கிடும் உணர்ச்சி தரும் அந்த முகத்தை, அதடைய தசைநார்க் கூட்டத்தின் அசைவை, அவன் உடம்பி ஓன்ன ஃழைத் தன்மையை எல்லாவற்றிற்கும் மேலாக அவனு டைய பிரசன்னத்தால் ஏற்பட்ட விசித்திரமான உணர்ச்சியை அவை எல்லாம் அப்போதுதான் என் மனத்தில் தைத்தன.. என் - 56ாடி. யெல்லாம் தளர்ந்து சோர்வது போலிருந்தது. அந்த வேளை யில் அந்த உணர்ச்சி முட்டாள்தனமான வெறுப்பினால் தான் ஏற்பட்டது என்று எண்ணினேன். ஆனால், வெறுக்கத்தக்க செய். லொன்றைக் கண்டதும் தன்னையுமறியாமல் மனஞ் சுழிக்கும் மனித சுபாவத்தான் அதற்குக் காரணம் என்றறிந்தேன். அந்த ஆசாமி (அவனைச் சந்தித்த க்ஷணத்திலிருந்தே அவனை எனக்குப் பிடிக்கவில்லை. நான் அவனைப் பற்றிச் சொல்லுவ தென்றால் வெறுப்புணர்ச்சியுடன் தான் சொல்ல முடியும்) சாதாரண மனிதனும் எள்ளி நகையாடும் வண்ணம் உடை உடுத் தியிருந்த சகன், அவன் உடுத்தியிருந்த ஆடைகள் விலையுயர்ந்ததும், நயமான துமானவைதான். எனினும் அவன் உடம்புக்கு அலை மிகப் பெரிதாயிருந்தன. கால்சராய் காவின்மேல் தொங்கிக் கிடந்தது. தரையைப் பெருக்கக் கூடாதே என்பதற்காக அவை மேலாகச் சுருட்டி விடப்பட்டிருந்தன. கோட் டின் இடுப்புப் பாகம் வயிற்றுக்கும் கீழே இறங்கியிருந்த து. கழுத்துப்பட்டை தோள் வரையில் அகன்றிருந்தது. இந்தக். கேலிக் கூத்தான ஆடையணிகளைக் கண்டும் எனக்குச் சிரிப்பு வராதது பெரிய அதிசயம். அந்த ஆசாமியிடம் அமானுஷ்யமான, அசாதாரண மான ஏதோ ஒன்று இருப்பதாகவே பட்டது. மனத் தைக் கல்வி, அதைக் கவிழ்க்கும் ஏதோ ஒரு புதிர். அவனிடம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்_இருவர்.pdf/72&oldid=1268798" இலிருந்து மீள்விக்கப்பட்டது