பக்கம்:நான் இருவர்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தன் இருவர் வெளியே போவதை நீங்கள் அனுமதிப்பீர்களா? அல்லது உன் களை வாட்டும் அந்த ஆவலைத் தீர்க்கத்தான் வேண்டும் என்று எண்ணுகிறீர்களா? நன்றாக யோசித்துப் பதில் சொல்லுங்கள், ஏனெனில் உங்கள் சொல்படி தான் நான் நடக்க வேண்டும். மரண வேதனையிலிருந்து ஒரு மனிதனைக் காப்பாற்றினோம் என்ற திருப்தியோடு, நீங்கள் இந்த விஷயத்தைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளாமல் முன்போலவே இருந்து 'விடலாம். அல்லது, நீங்கள் இஷ்டப்பட்டால், இங்கு. இதே அறையில், இதே க்ஷணத்தில் அறிவியலின் ஒரு புதுத் துறையே புகழுக்கும் சக்திக்கும் வழியாக இருக்கும் புத்தம் புதுப் பாதையே உங்கள் முன் தோன்றும். சைத்தா னின் 'நாஸ்திக வாதத்தையே தூள் தூளாக்கும் ஒரு அதிசயம்: உங்கள் முன் பிரத்தியட்சமாகத் தோன்றும் !" என்று சொன்னான் அவன். . என்னிடத்தில் அமைதி இல்லை. இருந்தாலும் அமை தியோடிருப்பதுபோல் காட்டிக் கொண்டேன். " ஸார். நீர் ஏதோ புரியாத தெல்லாம் பேசுகிறீர். நீர் சொல்லுவதை என் னால் நம்ப முடியவில்லை என்றால் உமக்கு அது ஆச்சரியமா யிராது. ஆனால், இந்தப் புதிரான வேலைகளின் முடிவையும் 1நான் காணத் தயார் !” என்றேன். " ரொம்ப நல்லது. லான்யன், உங்களுடைய வாக்குறுதி களெல்லாம் நினைவிருக்கட்டும். நடக்கப் போகும். விஷயம், நமது தொழில் ரகசியத்தைச் சேர்ந்தது. ரொம்ப காலமாக நீங்கள் குறுகிய லோகாயதக் கொள்கைகளையே நம்பி வந்த தால், சாஸ்திரத்துக்குப் புறம்பான அதீத மருந்துகளையே நீங்கள் மறுதளித்து வந்தீர்கள். அதனால், உங்களுக்கு மேலான "வர்களையும் மதியாது இருந்தீர்கள்-ஆனால், இதோ பாருங்கள் !" என்றான்.. அவன் கையிலிருந்த மருந்தை ஒரே மடக்கில் குடித்து விட் டான். உடனே அலறவிட்டான். சுற்றினான், தடுமாறினான். மேஜையை எட்டிப் பிடித்துக்கொண்டு, நிலைகுத்தி நின்ற கண் களை விழித்துப் பார்த்தான். திறந்த வாயோடு திணறினான். நான். பார்த்துக் கொண்டிருக்கும்போது அவனிடம் ஏதோ மாறுதல் உண்டாயிற்று. உடன் உடம்பு வீங்கிப் புடைத்த தி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்_இருவர்.pdf/75&oldid=1268802" இலிருந்து மீள்விக்கப்பட்டது