பக்கம்:நான் இருவர்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தான் இருவச் ரீயதில்லை, என்னுடைய இரண்டு குணங்களும் அதன் தன் வழியில் நாணயமானவை. கட்டுப்பாட்டை உதறித் தள்ளி, {வெட்ககரமான செயல்களில் இறங்கியதும் நான் தான் ; தீராக் கவலைக்கும், ஓயாத் துன்பத்துக்கும் ஒழிவுண்டாகும் மார்க்கத் தைக் கண்டுபிடிக்க, அறிவுத் துறையில் உலகோரின் முன்னே “அரும்பாடு பட்டதும் நானே தான். வாழ்க்கைக்கு அப்பாற். பட்ட தர்மங்களின் உண்மை நிலையை ஆராய்வதிலேயே முழு ஆம் கவனம் செலுத்தி வந்த என் விஞ்ஞான ஆராய்ச்சி, இந்த இரட்டைக் குணத்தின் இடைவிடாத போரின் மூலம் ஏற்பட்ட அனுபவத்தின் மீது ஒள் வீசியது. இப்படித் தினந்தோறும் Sr் ஓடைய இதயமும் அறிவும் வெவ்வேறு வழியில் வளர அர்னர், நான் அந்த உண்மையைச் சிறிது சிறிதாக நெருங்கி வேன், ஆனால், அந்த உண்மையைப் பரிபூர்ணமாகக் காணாமல், அரை குறையாக அறிந்து கொண்டதால்தான் என்னுடைய வாழ்க்கையே கவிழ்ந்து போய் விட்டது. அந்த உண்மை இது. தான் : உண்மையில் மனிதன் ஒருவனல்ல ; இருவர். நான், ஏன் இருவர் என்று மட்டும் சொல்லுகிறேன் என்றால், என் அறிவு அதற்கு மேல் செல்லவில்லை. பிறர் என் வழியில் வரு வார்கள் ; என் அ!டிச் சுவட்டிலேயே பின் தொடர்வார்கள். முடி. வாக மனிதன் என்பவன் பலர் நிறைந்த ஒரு சமூகம், அவ. னிடம் ஒன்றுக் கொன்று முரணான பல குணங்கள் தன்னிச்சை ய! ய்க் குடிவாழ்கின்றன என்ற முடிவிற்கு வருவார்கள் என்றே நான் கருதுகிறேன். சென்னைப் பொறுத்தவரையில், என் சுபாவப்படி. ஒரே ஒரு திசையிலே தான் சென்றுகொண்டிருந்தேன், நன்மை தீமையை உணரும் குணத்தின் மூலம், மனிதனுக்குள் வாழும் இந்த இரட் டைக் குணத்தை அறிந்தேன். என் சித்தக் களத்திலே அவை இரண்டும் எப்போதும் மோதிக் கொண்டே யிருந்தன. அந்த இரண்டு குணங்களும் நானே தான் என்று உண ரப் போய்த்தான் அவை இரண்டும் தனித்தனியாக என்னிலிருந்து கிளம்பியவை என்பதையும் என்னால் உணர முடிந்தது. என்னுடைய விஞ்ஞான ஆராய்ச்சியின் மூலம் இப்படிப்பட்ட அதிசயம் சாத்தியமாகும் என்பதை நான் அறிவதற்கு முன்பே, இந்த இரண்டு குணங்க வின் இரட்டை நிலையைப் பற்றியும் நான் பகற் கனவு கண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்_இருவர்.pdf/78&oldid=1268806" இலிருந்து மீள்விக்கப்பட்டது