உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நான் இருவர்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தான் இருவர் ஆனந்தித்தேன். இப்படி இரண்டையும் தனித்தனி உருவமா கப் பிரித்து விட்டால், தாங்க முடியாத எத்தனையோ வாழ்க் கைத் தொல்லைகளிலிருந்து விடுபடலாம் என எண்ணினேன். தூய குணா'த்தின் ஆசாபாசங்களுக்கு உட்படாமல், தீ,.! குணம் தன் வழியிலே செளகரியமாகச் செல்லலாம். தூய குணம் முன்னேற்றப் பாதையில் நிதானமாகச் சென்று, நற் காரியக் களைச் செய்யலாம்; தீய குணத்தினால் ஏற்படும் அவமானமும் அனுதாபமும் தூய குணத்தின் கருமத்தைப் பாதிக்காது. ஏறுக்கு மாறான இந்த இரண்டு குணங்களும் மனித வர்க்கத்தில் ஒன்று கிக் கிடப்பது, மனித வர்க்கத்துக்கே ஒரு சாபக்கேடு, சித்தகர்ப் பத்திலே, இரு துருவங்களைப் போன்ற இவ்விரட்டைக் குலைக் களும் இடையறாது போராடுவது பெரிய சாபக்கேடுதான், உ.பின், இவை இரண்டையும் எப்படிப் பிரிக்கலாம்? -இப்படி என் சிந்தனைகள் வளர்ந்து கொண்டிருக்கும் போது, என்னுடைய ரசாயன ஆராய்ச்சியிலிருந்து ஒரு ஓளிக் கீற்று அந்தச் சிந்தனையின் மீது பாய்ந்தது. அதன்பின் எனக்கு இதுவரையிலும் கண்டறியாத புது விஷயம் மனத் தாழத்தில் உருவாயிற்று.' உடை உடுத்தி நாம் உலாத்து கின்ற இந்த சரீரம் உருமாற முடியும், பனியைப் போல் கரைந்து, புது உருவம் அடைய முடியும் என்று பட்டது. உப்பரிகையின் திரைகள் காற்றில் அலைவீசுவது போல, சில மருந்துகள் சரீரத்தை உலுப் பீச் சிலுப்பி உருமாற்றவும் கூடும் என்று நான் கண்டேன். இந்த ஆராய்ச்சியைப் பற்றி நான் அதிகம் சொல்லாததற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று: ஒவ்வொரு மனிதனும் தன் தன் விதியையும் வாழ்வையும் தானே சுமந்து தீர வேண்டிய நிர்ப்பக் தத்துக்கு உட்பட்டவன் என்பதையும் நான் அறிந்துகொண். டேன், அந்தச் சுமையை இறக்கவோ தூர எறியவோ எண்ணரி னால், அது கீழே சாயாமல், தாங்க முடியாத "கனம் பெற்று அவனை மேலும் மேலும் அழுத்துகிறது. இரண்டு : அதை என் வாக்குமூலத்திலிருந்தே அறிந்து கொள்ளலாம். என்னுடைKS ஆராய்ச்சிகள் இடைவெளித் தட்டில் முடிவடையாமல் நிற்கின் றன. தெய்வக் களியும் ஒளியும் துலங்கும் என் ஆத்மாவும், என் ஊனுடம்பும் தனித்தனியானவை என்பதை நான் அறிந்ததோடு மட்டுமில்லை. சிம்மாசனமேறியிருக்கும் ஆத்ம சக்திகளைக் கீழே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்_இருவர்.pdf/79&oldid=1268807" இலிருந்து மீள்விக்கப்பட்டது