பக்கம்:நான் இருவர்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 cன் இருவர் தள்ளி, அதன் சக்தியைப் பறிக்க ஒரு மருந்தைக் கண்டு பிடித் தேன். அதன் மூலம் நான் வேறொரு உருவமும் முகமும் பெற் றேன். அதுவும் நான்தான். ஏனெனில் அந்த உருவத்திலும் என் ஆத்மாவின் சடைத்தரமான குணங்களின் முத்திரையும் இருக் தகடிப்பட்டத் பெ பே மருந்தது. புதிய இந்தச் சோதனையைச் சாதனையில் கொண்டு வருவதற்கு தான் மிகவும் தயங்கினேன், சரவுக்குத் துணிந்துதான். இந்தச் செதுவில் இறங்கினேன் என்பதும் எனக்குத் தெரியும்.. ஏனெ எனில், உடம்பின் கட்டுக்கோப்பையே உ.லைத்து உருமாற்றி, புதிய ஆகிருதியைப் படைக்கும் சக்தி பெற்ற அந்த மருந்தின் அளவில் ஓரு துளி கூடி.விட்டாலும், சந்தர்ப்ப பேதம் ஏற்பட்டாலும் சரி ரத்தையே ஒரேயடியாய்த் தொலைத்தாலும் தொலைத்துவிடும். ஆனால், இப்படிப்பட்ட அபூர்வமான' ஆராய்ச்சியைக் கண்டு பிடித்ததனால் உண்டான ஆவல், பயத்தை வென்று விட்டது. அந்த மருந்தைத் தயார் செய்து ரொம்ப நாள் வைத்திருந்தேன். கடைசியாக அந்த மருந்தில், கலக்க வேண்டிய உப்பை, வேண்டு 4.மட்டும் ஒரு மருந்துக் கடையிலிருந்து. வாங்கி வைத்துக் கொண் டேன். ஒருநாள் இரவு நான் மருந்துகளைச் சேர்த்தேன். அdை கொதித்து, புகை கிளம்புவதைக் கவனித்தேன். பொங்கி- அடங் இய..தும் அந்த மருந்தைத் தைரியத்துடன் குடித்து விட்டேன். பெரும் வேதனை உண்டாயிற்று. எலும்புகள் நொறுங்கி அரை பட்டதுபோலிருந்தது. வேதனை நிறைந்த ஓங்காரிப்பு வந்தது. சாக்காட்டின் போதும் ஜன்னத்தின் போதும் ஏற்படும் வதை விட, அதிக பயங்கரமான ப,ம் ஏற்பட்டது. இந்த வேதனை யெல்லாம் விரைவில் குறைந்தது ; கொடும் வியாதியீ விருந்து தப்பித்தவனைப்போல், நான் தன்னிலைக்கு வந்தேன். என்னுடைய உணர்ச்சிகளில் ஒரு அதிசயம், விவரிக்க முடியாத புதுமை தென்பட்டது ; அந்தப் புதுமையிலே, இனிமையுமிருந் தது. உடலிலே வாலிபம் திரும்பியது ; பாரம் குறைந்தது : உற் சாகம் வந்தது. என்னுள் ஒரு பொறுப்பற்ற முரட்டு சுபாவம் தலை தாக்கியது ; கோர்வையற்ற கற்பனைகள் பந்தயம் போல் ஓட்டம் ஓடி,ன ; கட்டுப்பாடுகள் உடைந்து, மனம் விடுதலை பெற்றது போலிருந்தது. அதுவரை நான் அறியாத உணர்ச்சி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்_இருவர்.pdf/80&oldid=1268808" இலிருந்து மீள்விக்கப்பட்டது