உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நான் இருவர்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தான் இருவர் 78 என் மனத்தில் பயங்கரம் குடிகொள்வதைக் கண்டேன். உடனே படுக்கையை காட்டு எழுந்து, நிலைக் கண்ணுடி.க்கு ஓட்டினேன், அதில் கண்ட காட்சி என் உடம்பின் ரத்தத்தில் மெல்லிய ஐஸைப் பாய்ச்சுவது போலிருந்தது. ஆம். நான் ஹென்றி ஜெகி லாக, படுக்கச் சென்றேன். எட்வர்ட் ஹைட்டாக எழுந்திருக் தேன் ! இதை நான் எப்படி, விளக்குவது? என்னையே நான் கேட்டுக் கொண்டேன். உடனே வேறொரு பீதி மனத்தைப் பற் றிக் கொண்ட... து. இதை எப்படி மாற்றுவது ? நன்ருக வீடிந்து விட்டது. வேலைக்காரர்கள் எழுந்து விட்டனர். என்னுடைய மருந்து வகையறாக்களோ ரசாயன சாலையில் இருந்தன. அதற்கோ படுக்கை ய ைறயிலிருந்து இரண்டு மாடிப் படிகளைத் தாண்டிப் போகவேண்டும். பின்கட்டு வழியாக, வான வெளி யான முற்றத்தின் வழியாக, ஆபரேஷன் மேடை வழியாகச் செல்லவேண்டும் எப்படிப் போவது ? முகத்தை மூடிக்கொள் எலாம். அதனால் என்ன பிரயோஜனம்? என் உடலின் உய ரத்தை என்ன பண்ணுவது? பிறகுதான் என் வேலைக்காரர்கள் என்னை ஹைடின் உருவத்தில் வந்து போவதைக் கண்டிருக்கிறார் களே என்ற எண்ணம் உதித்தது; அதன் மூலம் நிம்மதியும் பிறந்தது. உடனே உடைகளைச் சரிசெய்து கொண்டு வெளி வந் தேன். வரும்போது பிராட்ஷா என்னைப் பார்த்தான். அந்த வேளையில், அந்த மாதிரி வேஷத்தில் ஹைட் செல்லுவதைக் கண்டு அவன் பிரமித்தான். பத்து நிமிஷம் கழித்து ஜெகில் சுய உருவம் பெற்று, காலை உணவை அருந்திக் கொண்டிருந்தான். .. பசியே எடுத்ததாகத் தெரியவில்லை. இந்த விபரீத சம்பவம் சுவரில் எழுதிய தெய்வ நீதியை வாசித்த பாபிலோனியக் கரத் தைப் போல், என் அனுபவத்துக்கு எதிரிடையாகிப் பயமுறுத்தி யது. என்னுடைய இரட்டை வாழ்வின் பிரச்சினைகளை நன்கு ஆராயத் தொடங்கினேன். நான் - படைத்துவிட்ட அந்தப் புது உருவம் காலக்கிரமத்தில் நன்றாக வளர்ந்து விட்டது போலப் பட்டது. எட்வர்ட் ஹைடின் ஆகிருதியும் வளர்ந்து, அதில் ரத்த விருத்தியும் தேக புஷ்டியும் உண்டாகியிருந்தன. இப்படியே விட்டு விட்டால், என்னுடைய சுயரூபமே இல்லாது மறைந்து, என்னுடைய தீய குணம் மட்டும் நிலைத்து நின்று, நான் ஹைடா கவே இருந்துவிட நேருமோ என்ற பயம் மனத்தைப் பற்றியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்_இருவர்.pdf/87&oldid=1268816" இலிருந்து மீள்விக்கப்பட்டது