பக்கம்:நான் இருவர்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தான் . இத வச் டது. நான் தூய்வைதான்' துணிந்தேன்; எனினும் அதில் காலூன்றி நிற்க வலியிழந்து போய்விட்டேன். ஆம். நண்பர்கள் புடைசூழ, நல்ல எண்ணங்களோடு நிம்மதி யற்றுப் பொழுதைக் கழிக்கும் ஒரு வயதான டாக்டரின் அம்சத் தையே , நான் விரும்பினேன். நிைறடென்ற மாறுவேடத்தி விருந்து கொண்டு நான் அனுபவித்த சுதந்திரம், இளமை, ரத்தக் கொழுப்பு, ரகசிய இன்பங்கள் எல்லாவற்றிற்கும் ஒரு கும்பிடு போட்டு வழியனுப்பினேன். இந்த முடிவைச் செய்தபோதிலும், என்னை யறியாமலே அவ்வுருவில் உலவ நேரலாம் என்பதற்காக ஸோமோ வீட்டை விடாமல் வைத்திருந்தேன்; ஹைடின் துணி மணிகளையும் பத்திரமாக வைத்திருந்தேன். இரண்டு மாத கால மாய் என்னுடைய தீர்மானத்தைக் குலைக்க வில்லை, அத்தனை அடக்கத்தோடும் கட்டுப்பாடோடும் வாழ்ந்து வந்தேன்.. மனச் சாட்சியின் குதூகலத்தில் வாழ்ந்தேன். ஆனால் காலம் என்னு யை பிரதிக்ஞையை உடைத்து, பீதியைக் குலைத்தது. மனச் சாட்சியின். பாராட்டு மனத்துக்குப் பிடிக்கவில்லை. மனத்துக் குள்ளே ஹைட் 'விடுதலைப் போராட்டம் செய்வதுபோல், மனத்திலே ஆசைகள் எழும்பி அல்லற்படுத்தின. மனம் தளர்ந்திருந்த வேளையில், மீண்டும் ஒரு தடவை மருந்தைக் குடித்தே விட்டேன். ஒரு குடிகாரன் தனது குடிப்பழக்கத்தைப் பற்றி எண்ணும் போது, நூற்றுக்கு மேலான தடவைகளில் அந்தப் பழக்கத் தால் ஏற்பட்ட அபாயங்களைத் தெரிந்திருந்தும், அதைப்பற்றி யோசிக்கமாட்டான் என்றே நான் கருதுகிறேன். நானும் அக் படித்தான்.. எத்தனை தடவை ஆராய்ந்து நோக்கியும், ஹைடின் தீய செயல்களையும் ஒழுக்கக் கேட்டையும் நான் ஓரளவு அனு மதித்துத்தான் வந்திருக்கிறேன். அதனாலேயே நான் தண்டனை யும் அடைந்தேன். என் மனத்திலுள்ள பிசாசு வெகுகாள்.சிறைப் பட்டுக் கிடந்தது. அதனால் அது கர்ஜித்துக் கொண்டு வெளி'. வந்தது. மருந்தைச் சாப்பிடும்போதே, என் மனத்தில் மகா கோர. மான ஒரு செயலைச் செய்தாக வேண்டும் என்று பட்டது. நான் கொலை செய்த அந்த அப்பாவி டான்வெர்ஸின் பேச்சைக் கேட்டு, நான் பொறுமையிழந்து சீறியதற்குக் காரணமே, இதுவாயிருக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்_இருவர்.pdf/89&oldid=1268818" இலிருந்து மீள்விக்கப்பட்டது