பக்கம்:நான் இருவர்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான் இருவர் தம் குத் தெரியும், என் வாழ்க்கை அமைதியோடும், மகிழ்ச்சியோ டும் கழிந்ததையும் நீ அறிவாய். இந்தப் பரோபகார வாழ்வில் நான் சலித்து விட்டேன் என்று சொல்ல முடியாது. அதற்குப் பதிலாக, நித்த நித்தம் அதை நன்றாக அனுபவித்தேன். எணி னும் அந்தச் சாபக் கேடான இரட்டைக் குணம் மறையவில்லை.. என் அனுதாப உணர்ச்சியின் கூர்மை தேயத் 'தேய, உள்ளத்தி னுள்ளே விடுதலை பெற்றுத் திரிந்து, பின் அடைபட்ட அந்தத் தீய குணம் மனக், குகையில் உறுமியது. ஹைடை மீண்டும் &டருவாக்குவது என்பதைக் கனவிலும் கருதவில்லை. என்னுடைய மனச்சாட்சிப் போராட்டத்திலே, நான் தடுமாறினேன். சாதா ரணக் குற்றவாளியைப் போல், மனத்தில் மீண்டும் தீய எண் ணங்களுக்கு இடங்கொடுத்து அடிமையானேன். எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு உண்டு. எத்தனை பெரிய அண்டாவானாலும் நிறைந்துதானே போகும். தீய எண்ணத் துக்கு மனத்தில் சிறிது இடம் கொடுத்ததும் அது, . என் ஆத்ம உணர்ச்சியின் சி!மன் நிலையைத் தள்ளி விட்டது. எனினும் நான் அஞ்சவில்லை. ஏனெனில் அந்த வீழ்ச்சி, நான் அந்த மருந்தைக் கண்டு பிடிப்பதற்கு முன்னிருந்தது போலத்தான் இருந்தது. ஜனவரி மாதத்தில், நிர்மலமான ஒரு நாள். தரையில் படிந்திருந்த பணி மறைந்து கொண்டிருந்தது, மேகம் துளிக் கூடக் கிடையாது. ரீஜண்ட்ஸ் பார்க்கில், வசந்தத்தின் இனிய.. மணமும், பனிக்காலத்தின் எழிலும் நிறைந்திருந்தது. சூரிய ஒளியில் நான் ஒரு பெஞ்சு மீது உட்கார்ந்திருந்தேன். என் மனத் திலே குடிவாழும் மிருகம், நினைவின் கறித் துண்டங்களை நக்கி நக்கிச் சுவை கண்டு கொண்டிருந்தது, ஆத்ம சக்தி அயர்ந்திருந் தது. மேலும், குற்றத்துக்குப் பிராயச் சித்தம் செய்துவிட முடியும் என்ற எண்ணம் வேறு கிளர்ந்தது. நானும் மற்ற மனிதர்களைப் போலத்தானே என்று கருதினேன். என்னுடைய ச து கறுப்பு மிகுந்த நற்காரியங்களையும், அவர்கள் அதைப் புறக்கணித்து எவ்வளவு கொடுமையாகச் சோம்பிக் கிடக்கிறார் கள் என்பதையும் நினைத்துச் சிரித்தேன். தற்பெருமை அந்த நிமிஷமே தலையெடுத்தது. உடனே உடலிலே ஒரு நடுக்கம், பயங்க நீ ஓங்கரிப்பு, ஒரே சிலி சிலிர்ப்பு ! பிறகு ஓரே மயக் தே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்_இருவர்.pdf/92&oldid=1268821" இலிருந்து மீள்விக்கப்பட்டது