பக்கம்:நான் இருவர்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தான் இருவர் வேதனை குறையவில்லை, கொடித்துப் போன ஆத்மாவோடு, வாழ்ந்து தொலைக்க வேண்டி நேர்ந்தது. இந்தத் தண்டளை பல வருஷ காலம் என்னை வாட்டியெடுக்கக் கூடும். ஆனால், இப் போது ஒரு பெரும் விபத்துக் கடைசியாக நேர்ந்துவிட்டது. இதன் மூலம் என் உருவ மாற்றத்துக்கே இடமில்லாமல் போய் வீட் டது, என்ணிடமிருந்த அந்த உப்புக் குறைந்து போய் விட்டது, முதல் தடவை வாங்கியதற்குப்பின் செலவின் குறையை, நான் ஒழுங்காக நிறை செய்து வரவில்லை. புதிதாக உப்பு வாங்கி னேன். மருந்தில் கலந்தேள், பொங்கியது. நிறம் மாறியது, மீண் டும் நிறம் மாற வில்லை. அதைக் குடித்தேன் ; அது செயலிழந்து போய் விட்டது ! அந்த உப்புக்காக எப்படி லண்டன் நகரத். "தையே சலித்து அலசிப் பார்த்து விட்டேன் என்பதை, பூல் உன் ரீடம் சொல்வான். எல்லாம் பலனளிக்கவில்லை. முதலில் வாங்க கிய உப்பு அவ்வளவு சுத்தமானதில்லை. ஆனால், அந்த இனம் தெரியாத அசுத்தத்தான் மருந்தின் வேகத்தைக் கூட்டியிருக் கிறது என்று நான் கருதுகிறேன். ஒரு வாரம் கழிந்து விட்டது. கடைசியாக மிச்சம் மிஞ்சாடி யாக உள்ள உப்பிள் உதவி கொண்டு தான், இந்த சரிதத்தை நான் 6: முத முடிகிறது. ஹென்றி ஜெகில் தன்னுடைய சுய ஓனைவோடு இன்று தான் கடைசி முறையாக ஏதேனும் எண்ண முடியும், தன் முகத்தைக் கடைசி முறையாகக் காண முடியும் ! ஒரு பெரும் அதிசயம் நடந்தாலன்றி இதில் முன்னேற்றம் காண முடியாது. இதை எழுதுவதிலேயே நான் தொழுதைக் கழிக்க வும் முடியாது. இது வரையில் 'ஹைட் இந்த வரலாற்றையும் பிடுங்கி நாசமாக்காமல் இருக்கிறான் என்றால் அதற்கு அதிருஷ் டமும், எச்சரிக்கையுந்தான் காரணம். இதை எழுதிக் கொண்டி ருக்கும் போதே என்னில் மாறுதல் ஏற்பட்டால் ஹைட் இதைத் தும்பு தும்பாகக் கிழித்தெறிந்து விடுவான். இதை எழுதி முடித்து வைத்தபின் அவன் உருப் பெற்றால் தான், " இது தப்பிப் பிழைக் கும். சுய நலமும், சந்தர்ப்பத்தை உணரும் சக்தியும் இருந்தால், குரங்குத் தனமான குணத்தை அவன் அடக்கி, இதைப் பிழைக்க வைப்பான்; அரை மணி நேரத்துக்குள் நான் அந்தப் பாழாய்ப் போன ஹைடின் ரூபத்தை நிரந்தரமாகப் பெற்று விடுவேன் ! என் ஆசனத்தில் கிடந்து எப்படிக் கதறி அழுவேன்' என்பதும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்_இருவர்.pdf/98&oldid=1268827" இலிருந்து மீள்விக்கப்பட்டது