பக்கம்:நான் கண்ட சோவியத் ஒன்றியம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

17

கச்சையை மாட்டிக் கொள்ளுங்கள். புகை குடிக்காதீர்கள் என்ற சிவப்பு அறிவிப்புப் பலகையில் ஒளி வீசிற்று. அப்படி ஒரு கட்டளையும் ஒலித் தது. வேகமாகக் கச்சையை மாட்டிக்கொண்டோம்.

'டாஸ்கண்ட்' விமான நிலையத்தில் இறங்கப் போகிறோம் என்று அறிவிக்கப்பட்டது. தில்லியிலிருந்து மாஸ்கோவிற்குச் செல்லும் விமானம் இறங்கும் முதல் இடம் இதுவே. இதுவே சோவியத் ஒன்றியத்திற்கு விமான வாயிற்படி. இங்குச் சுங்கத் தணிக்கை நடத்துவார்கள். நுழைவுச் சீட்டைச் சோதிப்பார்கள். அம்மைத் தடுப்பு', காலராத் தடுப்பு ஊசி போட்டுக்கொண்டதற்கான சான்றுகளையும் காட்ட வேண்டும்.

உயரப் பறந்த விமானம், மெள்ள மெள்ள இறங்கி வந்தது. தரையிற் சேர்ந்ததும் சட்டென்று நிற்கவில்லை. சிறிது தாரம் ஒடிற்று; பின்னர் நின்றது. நாங்கள் கச்சைகளே அவிழ்த்துவிட்டோம். கீழே இறங்குவதற்கு ஆவலோடு எழுநதோம்.

இறங்கு படி, விரைவாக விமானத்தோடு பொருத்தப்பட்டது. இமைப்பொழுதில், இருவர் அதன் மேல் ஏறி வந்தனர். அவர்கள் இறங்கும் வழியை மறைத்துக்கொண்டனர். முதலில் வந்தவர், அங்கு நின்றபடியே ஏதோ கூறினர். "நாங்கள் சொல்லும்வரை யாரும் இறங்கக் கூடாது' என்று ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து அறிவிக்கப்பட்டது. அவரோடு நின்றவர், ஒரு தட்டு நிறைய 'சூடு காட்டி (தெர்மா மீட்டர்) வைத்திருந்தார்.