18
ஒவ்வொருவர்க்கும் ஒரு சூடுகாட்டி கொடுக்கப்படும். அதைப் பெற்று ஒவ்வொரு பயணியும் தன் தட்பவெப்ப நிலையைக் காட்ட வைத்துக்கொள்ள வேண்டும். 'மருத்துவர் வந்து பார்க்கும்வரை எடுக்க வேண்டா' என்று அறிவிக்கப்பட்டது. அப்படியே ஒவ்வொருவரும் ஒரு குடுகாட்டியைப் பெற்று நாக்கின் அடியில் வைத்துக்கொண்டு காத்திருந்தோம்.
மருத்துவர் ஒவ்வொருவராகப் பார்த்து வந்தார். வாயில் இருந்ததை எடுத்து, அக்குளில் வைத்துக் கொள்ளும்படி சாடை காட்டினார். வேறு வழி? சொக்காய்ப் பொத்தானே எடுத்துவிட்டு, சொன்னபடி செய்தோம். சிறிது நேரம் சென்றபின் வந்து பார்த்தார். நார்மல் அதாவது இருக்க வேண்டிய அளவே இருக்கிறது என்று கூறினும். எங்கள் மூவருக்கும் அதே முடிவு. இச்சோதனை முடிந்ததும் கீழே இறங்கலாம் என்றார்கள். இதற்கிடையில் எங்கள் நுழைவுச் சீட்டுகளே வாங்கிக் கொண்டார்கள். பத்திரமாக வந்து சேர்ந்ததோடு உடம்பும் நன்றாயிருக்கிறதே என்கிற மகிழ்ச்சியில் மடமடவென்று இறங்கினோம்.
படிக்கட்டின் அடியில் காத்திருந்தினர் சிலர். அதில் ஒருவர் முன்வந்து, முதலில் இறங்கிய என் னிடம் அறிமுகப்படுத்திக் கொண்டார். பக்கத்திலிருந்தவர், 'உஸ்பெகிஸ்தான் குடியரசின் கல்வித் துணை அமைச்சர்' என்று அதை மொழிபெயர்த் தார். பின்னர் எங்கள் குழுவைச் சேர்ந்த மற்ற இருவருக்கும் அவர் அறிமுகம் ஆயிற்று. பின்னர், அடுத்து இருந்த கல்வி இயக்குநருக்கும் மொழி