பக்கம்:நான் கண்ட சோவியத் ஒன்றியம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

உலாவச் சென்ற பொழுது அந்த நகரில் கண்ட காட்சிகளைத்தான் முன்னரே படித்தீர்கள்.
சோவியத் மண்ணில் முதன்முதல் அறிந்து கொண்டது என்ன? பாட்டிகளுக்குப் படிப்பில் உள்ள ஆர்வத்தை முதன்முதல் தெரிந்துகொண்டோம்; ஆனால் அஃது அமைதியில்லாத அறிவு.
முறைப்படி அறியத் தொடங்கினது மறுநாள் செப்டம்பர் பதினராம் நாள். காலை உணவை முடித்தபின், அவ்வேலையில் ஈடுபட்டோம்.
எங்கள் முதல் நிகழ்ச்சி, உஸ்பெகிஸ்தான் குடியரசின் கல்வி அமைச்சரோடு பேட்டி.
அவருடைய பெயர் தோழர் கதிரவ். அவர் எங்களுக்கு ஒரு மணி நேரம் பேட்டியளித்தார். அவர் ஒரு தகவல் சுரங்கம். புள்ளி விவரங்கள் தங்கு தடையின்றி வந்தன. அவர் பேச்சை மொழி பெயர்ப்பாளர்கள் இருவர் எங்களுக்கு ஆங்கிலத்தில் சொன்னர்கள். ஒருவர் மாறி ஒருவர் மொழி பெயர்ப்பு வேலை செய்தனர். அவ்விருவரில் ஒருவர் ஆண்; அவர் பெயர் இஸ்மத்துல்லாயெம் ஹைருல்லா. மற்ருெருவர் பெண். அவர் பெயர் மல்லாைேவா தில்பார். பேட்டியின்போது துணைக் கல்வி அமைச்சர் சயித் நியாலோவ், கல்வி இயக்குநராகிய மகமுதல் ஆகியோர் உடன் இருந்தனர்.
அன்றிருந்த அவல நிலையையும் இன்றுள்ள ஏறுமுகத்தையும் அவர் விவரித்தபோது