23
உணர்ச்சிகள் உலுக்கின. அன்று, 1917ஆம் ஆண்டு அக்டோபர் புரட்சிக்கு முன், ஜார் மன்னனின் காலடியில் கிடந்தது உஸ்பெகிஸ்தான். ஜாரின் சார்பிலே அக்கம்பக்கத்துக் குட்டிக் காட்டு அரசர்கள் கொடுங்கோல் நடத்தினர். ஆனால் இன்று, தனக்கென்று ஓர் அரசியல் அமைப்பும் ஆட்சியும் உடைய குடியரசாக உள்ளது. சோவியத் ஒன்றியத்தில் இணைந்துள்ள பதினேந்து குடியரசுகளில் ஒன்றாகத் திகழ்கிறது என்று பெருமைப்பட்டார் தோழர் கதிரவ்.
இக்குடியரசு, மத்திய ஆசியாவின் நடுப்பகுதி. இதன் தென் எல்லை, ஆப்கானிஸ்தானின் வட எல்லையை ஒட்டியுள்ளது. இதன் பரப்பு 4,09,000 சதுரக் கிலோ மீட்டர்கள். குடிமக்களின் எண்ணிக்கை 81,00,000 ஆகும்.
இப்பகுதி முழுமைக்கும், 1914-15 ஆம் ஆண்டில் 160 பள்ளிகளே இருந்தன. இவற்றில் படித்தவர்கள் மொத்தம் 7,800 பேர். இவற்றுள்
12 பள்ளிகள் மட்டுமே உயர்நிலைப் பள்ளிகள். நாட்டுப்புறங்களில் ஒர் உயர்நிலைப் பள்ளியும் இல்லை. அதற்குமேல் படிப்பதற்கோ எவ்வித அமைப்பும் வாய்ப்பும் இல்லை. எனவே, நூற்றில் தொண்ணுாற்றெட்டுப் பேர் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள், அறியாமையில் மூழ்கியிருந்தனர். மக்கள் அறியாமைக் காரிருளில் மூழ்கியிருக்கும் போது காலிகளுக்குத்தானே உயர்வு. 'வீரர்'களெல்லாரும் ஊரை உறிஞ்சினர். வளமுள்ள