உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நான் கண்ட சோவியத் ஒன்றியம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

25

பாபரை அனுப்பினது சாமர்கண்ட் என்பது சரித்திரம் படித்தவர்களுக்கு நினைவிற்கு வரும்.
மொத்த மாணவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று கேட்டு வைத்தோம். அடுத்த வினாடி பதில், 16,00,000 மாணவ மாணவிகள் என்று பூரிப்போடு கூறிஞர். 'ஏன் சரிதானே?' என்று கல்வி 'இயக்குநரை'க் கேட்டார். அவர், சரியென்று உறுதிப்படுத்தினர். தலையாட்டியன்று, வாய்மூடியுமன்று; பளிச்சென்று தகவல் கொடுத்து உறுதிப்படுத்தினர். பேட்டியின்போது, பலமுறை இப்படி நடந்தது. 'எனக்குத் தெரிந்ததைவிட அதிகம் தெரியும் எங்கள் இயக்குநருக்கு’ என்று அமைச்சர் கூறியதை எங்களால் நம்பமுடியவில்லை. அப்படியா? என்று வியந்தோம்.
"ஆம் இருவரும் கல்வித் துறையில் வேலைக்கு அமர்ந்தோம். எனக்கு மூத்தவர்-அனுபவத்தில் கூட-இயக்குநர். அவருக்கு அரசியல் என்ருல் குமட்டும். எனக்கோ அதில் ஆசை. நான் பொது வுடைமைக் கட்சியின் உறுப்பினன். பல்லாண்டுகளாக அதில் தீவிரப் பங்குகொண்டிருந்தேன். ஆகவே பிராந்திய இயக்குநர் நிலையில் இருக்கும் போது சோவியத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். ஆசிரியர் தொழிலே விட்டுவிட்டேன். கல்வி அமைச்சராகிவிட்டேன். என் நண்பர் விரும்பியிருந்தால், கட்சியில் ஈடுபட்டிருந்தால், என் நிலையில் அவர் இருப்பார்’ என்று கல்வி அமைச்சர் தம் இயக்குநரைப் பாராட்டினார்.