இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
28
உழைப்பும் வீணாகும். எல்லோரையும் தேற வைக்கத் தனிக் கவனம் தேவை. தனிக் கவனத்திற்கு ஆசிரியருக்கு மாணவர் எண்ணிக்கை அடக்க மாயிருக்க வேண்டும். மாணவர் வீதத்தை அதிகப் படுத்தி, ஆசிரியரை மிச்சப்படுத்துவது தவருன பொருளாதாரம். ஆசிரியர்களைக் குறைத்தால் மாணவர் தேர்ச்சி குறைந்துவிடும். பாதிப் பேர் தேறவா பள்ளிக்கூடம்? பேச்சாளருக்குப் பெருங் கூட்டம். கற்றுக் கொடுக்கும் ஆசிரியருக்கு அடக்க மான வகுப்பு. இதுவே முறை என்ற அவர்கள் வாதத்தை மறுக்க முடியுமா? மறக்கவும் முடிய வில்லையே!