உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நான் கண்ட சோவியத் ஒன்றியம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



37

சோதனைக் கூடங்களைக் கண்டோம். அவை காட்சிக் கூடங்களாகமட்டுமன்றி மாணவர்கள் தாமே சோதனை செய்து பார்த்துக் கற்கும் கூடங்களாகவும் பயன்பட்டன.

பள்ளிகளின் பொருள்நிலையைப்பற்றிக் கூறினால் போதுமா ? அங்குள்ள மக்கள் நிலை எப்படி ? முதலில், கற்கும் மாணவ, மாணவிகளைக் கவனிப் போம். அவர்கள் மகிழ்ச்சியோடு இருந்தனர். ஆனால், விளையாட்டுத்தனமாக இல்லை. படிப்பதிலும் பிற பள்ளிச் செயல்களிலும் ஆர்வத்தோடு இருந்தனர். வளர்ச்சி எப்படி? சிறுவர் சிறுமியர் நல்ல வளர்ச்சியோடு இருந்தனர். புல் தடுக்கி’ச் சிப்பாய்களைக் காணவில்லை. நோஞ்சான்’கள் இல்லை. கத்திரிக்காய்"களாவது உண்டா ? பிந்திய வகையினரும் தென்படவில்லை, மலர்க் கொடிகள்' உண்டா ? இல்லை. வாட்டசாட்டமாக இருப்பதே, அந்நாட்டுப் பெண்களின் குறிக்கோள் என்று தோன்றிற்று.

அவர்களது ஒழுங்கு, கட்டுப்பாடு ஆகியவை எப்படி ? இரண்டும் நன்றாக இருந்தன. வகுப்பறைக்குள், ஆசிரியரோ பார்வையாளர்களோ முதலில் நுழையும்போது எல்லோரும் எழுந்துநிற்பர். த்ரஸ்த் வித்சா என்று கூறி வரவேற்பர். 'த்ரஸ்த் வித்சா' என்பது இரஷியச் சொல். பொருள் என்ன ? 'வணக்கம்'. இச் சொல்லே இரவு பகல் எந்நேரத்திலும் பயன்படுத்தலாம் என்று சொன்னார்கள். ஆசிரியர் சொன்ன பிறகே மாணவர்கள் உட்காருவது வழக்கம். ஆசிரியர்களுக்குக்

   நா-3