உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நான் கண்ட சோவியத் ஒன்றியம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

கீழ்ப்படிதலை எல்லோரிடமும் கண்டோம். அது,என் பள்ளிக்கூடக் காலத்தை நினைவுபடுதியது

ஆசிரியர், ஏதாவது ஒரு கேள்வியைப் பொதுவாகக் கேட்டால், பதில் தெரிந்தவர்கள், உட்கார்ந்தபடியே வலக் கையை உயர்த்துவார்கள். பின்னர், ஆசிரியர் யாராவது ஒரு மாணவனேயோ, மாணவியையோ பெயர் சொல்லுவார். அவர், எழுந்து நின்று பதில் கூறுவார். அவர் பதில் சரியாக இல்லாவிட்டால், மற்றோருவரைப் பெயர் சொல்லிக் கூப்பிடுவார். இப்படியே பதில் வரவழைக்கப்படுவதைக் கண்டோம்.

சிந்தனைச் சாரம் இதோ!

எத்தனை அழகான பள்ளிகள்!எத்தனை அருமையான கல்வி முறை !

பள்ளித்தலம் அனைத்தும் அற்புதமான கல்விக் கோயில்களாக அல்லவா ஆகியிருக்கின்றன சோவியத் ரஷிய நாட்டில்!