5. குழந்தைகளே ஒட்டிய இரயில்.
இந்தியக் கல்விக் குழு, டாஸ்கண்டிலும் அந்நகரைச் சுற்றிலும் பார்த்த பள்ளிகள் ஒவ்வொன்றையும் விவரித்து உங்கள் பொறுமையைச் சோதிக்க விரும்பவில்லை. எனினும், இரண்டொரு பள்ளியைப்பற்றியாவது குறிக்காமல் விடுவது சரியன்று.
டாஸ்கண்ட் நகரில் 'இசை உறையுள் பள்ளி' ஒன்று இருக்கிறது. அதற்கு எங்களை அழைத்துச் சென்றார்கள். நாங்கள் கண்டு மகிழ்ந்தோம். பள்ளியின் தலைவர் எங்களை ஆர்வத்தோடு வரவேற்றார். பள்ளியின் பகுதிகளுக்கும் அழைத்துச் சென்றார். நடைமுறைகளைக் கவனிக்கச் செய்தார். நல்ல தேனீர் விருந்து அளித்தார். புது 'தர்பூஸ் பழத்தைக் குடைந்து பழக்கூடையாக்கியிருந்தனர். அது நிறையத் திராட்சைப் பழங்களைப் போட்டுவைத்தனர். தின் பண்டங்கள் பலப்பல பரிமாறினர்கள். 'இதைக் கொஞ்சம் சாப்பிடுங்கள்; இப்பழத்தைக் கொஞ்சம் ருசி பாருங்கள்’ என்று உபசரித்தார்கள் ஆசிரியர்களும் மாணவ மாணவிகளும்.
'எவ்வளவு பலமான உபசாரம்!' என்று வியந்தோம்."அப்படியொன்றுமில்லேயே! 'தந்தையினும் மரியாதைக்குரியவர் விருந்தாளி' என்பது